துபாய்:
இந்த ஆய்வில் தற்போது 18 வயதுக்கு மேற்பட்டவர்களில் 13.7 சதவீதம் பேர் நீரிழிவு நோயால் பாதிக்கப்பட்டுள்ளனர். நீரிழிவு நோய் தாக்கம் ஏற்பட வாய்ப்புள்ளதாக 16.2 சதவீதம் பேரிடம் கண்டறியப்பட்டுள்ளது.
நீரிழிவு நோய் தாக்கம் ஏற்பட வாய்ப்புள்ளதாக 45.8 சதவீதம் பேர் எண்ணிக்கை பதிவு செய்யப்பட்டுள்ளது. இதில் தற்போது வெளியிடப்பட்டுள்ள ஆய்வின் முடிவில் 25 வயது முதல் 45 வயதுடைய 13 சதவீதம் பேர் நீரிழிவு நோய் தாக்க வாய்ப்புடைய நபர்களாக உள்ளனர்.
17 சதவீதம் பேர் தினசரி வீட்டு வேலைகள், நடந்து செல்வது போன்ற உடல் செயல்பாடுகளை செய்து வருவதாக கூறியுள்ளனர். நீரிழிவு நோய் தாக்கப்பட்டவர்களில் அமீரகத்தை சேர்ந்த 28 சதவீதம் பேரும், 10 சதவீத வெளிநாட்டவரும் புகைபிடிப்பதாகக் கூறியுள்ளனர். அமீரகத்தை சேர்ந்தவர்களில் 14.5 சதவீதமும், வெளிநாட்டை சேர்ந்தவர்களில் 6.3 சதவீதம் பேரும் புகை பிடிப்பதில்லை என கருத்து தெரிவித்துள்ளனர்.
நீரிழிவு நோயால் பாதிக்கப்பட்டுள்ளவர்களில் மொத்தம் 2.9 சதவீதம் 18 வயது முதல் 24 வயதுடையவர்கள் ஆவர். அதேபோல் 60 அதற்கு மேற்பட்ட வயதுடையவர்களில் 43.7 சதவீதம் பேர் நீரிழிவு நோயால் பாதிக்கப்பட்டுள்ளனர்.