பூமியை தற்காலிகமாக சுற்றிவந்ததது குறுங்கோள் அல்ல!

பூமியை தற்காலிகமாக சுற்றிவந்த ஒரு பொருள், சிறிய கோள் அல்ல; மாறாக, அது 54 வயதுடைய ஒரு ராக்கெட் என்று வானியல் விஞ்ஞானிகள் இறுதியாக கண்டறிந்து, கேள்விகளுக்கு முற்றுப்புள்ளி வைத்துள்ளனர்.

அமெரிக்காவின் ஹவாய் தீவில் வைக்கப்பட்ட ஒரு டெலஸ்கோப்பின் மூலம் இந்த உண்மை கண்டறியப்பட்டுள்ளதாக தெரிவித்தது கலிபோர்னியா மாகாணத்திலுள்ள நாசாவின் ஜெட் புரபல்சன் ஆய்வகம்.

கடந்த செப்டம்பரில் இந்தப் பொருள் கண்டறியப்பட்டபோது, அதுவொரு சிறிய கோள் என்று கருதப்பட்டது. ஆனால், நாசாவின் மூத்த ஆய்வாளரான பால் சோடாஸ், அது சர்வேயர் 2 ராக்கெட்டின் ஒரு பாகமாக இருக்கலாம் என்று சந்தேகம் தெரிவித்தார்.

அந்த ராக்கெட், கடந்த 1966  ஆம் ஆண்டு நிலவில் தரையிறங்கும் முயற்சியில் ஈடுபடுத்தப்பட்டு, தோல்வியில் முடிந்தது அத்திட்டம்.

தற்போது, பால் சோடாஸ் வெளியிட்ட சந்தேகம் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. ஹவாய் தீவில் பொருத்தப்பட்ட இன்ஃப்ராரெட் டெலஸ்கோப் மூலமாக அந்த உண்மை தற்போது உறுதிசெய்யப்பட்டுள்ளது.

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here