நடிகர் கார்த்தி மீது நடிகை காயத்ரி ரகுராம்  விமர்சனம்

நடிகர் கார்த்தி தனது அறக்கட்டளையின் ஆதாயத்திற்காக பொதுமக்களிடம் பொய்யைத் திணிப்பதாக, நடிகை காயத்ரி ரகுராம் விமர்சித்துள்ளார்.

டெல்லியில், வேளாண் சட்டங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து போராடி வரும் விவசாயிகளுக்கு ஆதரவாக, கடந்த 2-ஆம் தேதி நடிகர் கார்த்தி அறிக்கை வெளியிட்டிருந்தார்.

அதில், போராடும் விவசாயிகளின் குரலுக்கு செவிசாய்த்து, உழவர்கள் சுதந்திரமாக தொழில் செய்வதை மத்திய அரசாங்கம் உறுதிப்படுத்த வேண்டும் என்பதே அனைத்து மக்களின் எதிர்பார்ப்பு. அதை அரசு தாமதிக்காமல் செய்ய வேண்டும் என கார்த்தி வலியுறுத்தியிருந்தார்.

இந்த நிலையில், நடிகர் கார்த்தி தனது அறக்கட்டளையின் ஆதாயத்திற்காக பொதுமக்களிடம் பொய்யைத் திணிப்பதாக பாஜகவை சேர்ந்த நடிகை காயத்ரி ரகுராம் தனது ட்விட்டர் பக்கத்தில் விமர்சனம் செய்துள்ளார்.

வல்லுநர்களுடன் நேருக்கு நேர் ஊடகங்களில் விவாதம் செய்யுங்கள், மக்களை முட்டாள் ஆக்காதீர்கள் எனவும் காயத்ரி ரகுராம் பதிலடி கொடுத்துள்ளார்.

Dailyhunt

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here