முதன்முதலாக நோபல் பரிசு வழங்கப்பட்ட நாள்

இயற்பியல், வேதியியல், இலக்கியம், மருத்துவமும் உடலியங்கியலும், அமைதி, பொருளியல் ஆகிய துறைகளில் குறிப்பிடத்தக்க பங்களிப்பை வழங்குவோருக்கு ஆண்டுதோறும் வழங்கப்படும் பரிசான நோபல் பரிசு 1901-ஆம் ஆண்டு முதன்முதலாக வழங்கப்பட்ட நாளாக டிசம்பர் 10 ஆம் நாள் விளங்குகிறது.
இந்த விருது, இது வேதியியலாளர் ஆல்ஃபிரட் நோபெல் என்பவரால் 1895- இல் தொடங்கப்பட்டது. ஒப்பற்ற ஆய்வு மேற்கொண்டவர்களுக்கும் பெரும் பயன் விளைவிக்கும் தொழில்நுட்பங்கள் அல்லது கருவிகளைக் கண்டுபிடித்தவர்களுக்கும் சமூகத்திற்கு அரிய தொண்டாற்றியவர்களுக்கும் வழங்கப்படும் உலகளவில் பெரிதும் மதிக்கப்படும் பரிசு இதுவாகும்.
இந்த பரிசு பெறும் ஒவ்வொருவரும், ஒரு தங்கப்பதக்கமும் ஒரு பட்டயமும், நோபல் அறக்கட்டளையின் அவ்வருட வருமானத்தைப் பொறுத்து பரிசுப் பணமும் பெறுவர்.

வருடந்தோறும் நோபெல் நினைவு தினமான டிசம்பர் மாதம் பத்தாம் நாளில் அமைதிக்கான நோபல் பரிசு தவிர மற்ற அனைத்து நோபல் பரிசுகளும், சுவீடனில் உள்ள ஸ்டோக்ஹோம் நகரத்தில் வழங்கப்படுகின்றன.

பரிசு பெறுவோரின் சொற்பொழிவு, இந்நிகழ்ச்சியின் முன்தினம் நடைபெறுவது வழக்கம். அதே டிசம்பர் பத்தாம் நாள், நார்வேயில் உள்ள ஒஸ்லோ நகரில், அமைதிக்கான நோபல் பரிசு வழங்கும் விழா, பரிசு பெறுவோரின் சொற்பொழிவும் நடைபெறும்.
ஆல்ஃபிரட் நோபெல் உயில் எழுதும் சமயத்தில் நார்வேவும் சுவிடனும் ஒரே கூட்டுப்பிரதேசமாக இருந்ததால், நார்வேயில் அமைதிக்கான பரிசும், சுவிடனில் மற்ற பரிசுகளும் வழங்கப்படுகின்றன. இந்நிகழ்ச்சியும், இதனையொட்டி நடைபெறும் விழாக்களும், சமீபகாலமாக உலகளாவிய நிகழ்ச்சியாக விளங்குகின்றன.

நோபல் பரிசினை இதுவரை மூன்று தமிழர்கள் பெற்றுள்ளனர். இந்தப் பெருமைக்குரியோர் ச.வெ. இராமன் (இயற்பியர்-1930), சுப்பிரமணியன் சந்திரசேகர் (இயற்பியல்-1983), வெங்கட்ராமன் ராமகிருஷ்ணன் (வேதியியல்-2009) ஆவர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here