இவர்கள் முதன்முதலாக 1903- ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் இதே தேதியில் பெட்ரோல் இயந்திரம் பூட்டிய வானூர்தியில் முதன்முதலாக பூமிக்கு மேல் 12 வினாடிகளில் 120 அடி தூரம் பறந்து சாதனை படைத்தனர்.
விமானம் கண்டுபிடிக்க வேண்டும் என்பதற்காகவே இவர்கள் இருவரும் திருமணமே செய்து கொள்ளவில்லை.
வில்பர் ரைட் 1912-ஆம் ஆண்டிலும், ஆர்வில் ரைட் 1948ஆம் ஆண்டும் மரணமடைந்தனர். இவர்களே விமானத்தை கண்டறிய முன்னோடிகளாக திகழ்ந்தவர்கள்.
இவர்கள் பறந்த அந்த தினத்தை ரைட் சகோதரர்கள் நாளாக ஆண்டுதோறும் கடைப்பிடித்து வருகின்றனர்.