தலைநகர் டில்லியில் நள்ளிரவில் நிலநடுக்கம்

புதுடில்லி-
டில்லி, சுற்றுவட்டாரப்பகுதியில் நள்ளிரவில் திடீர் நிலநடுக்கம் ஏற்பட்டது. இதனால் பொது மக்கள் பீதியில் உறைந்தனர்.

தலைநகர் டில்லியில், நள்ளிரவு 11.45 மணியளவில், திடீர் நிலநடுக்கம் ஏற்பட்டது. ரிக்டரில் 4.2ஆக பதிவான இந்நிலநடுக்கத்தால், கட்டடங்கள் அதிர்ந்ததால், பொதுமக்கள் பீதி அடைந்தனர்.

குருகிராமிலிருந்து 48 கி.மீ., தொலைவில், மையமாகக் கொண்டு நிலநடுக்கம் ஏற்பட்டதாக தேசிய புவியியல் மையம் தெரிவித்துள்ளது.

இந்நிலநடுக்கத்தால், உயிரிழப்பு ஏதும் ஏற்படவில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது.

facebook sharing button
twitter sharing button
whatsapp sharing button

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here