பெட்டாலிங் ஜெயா: டத்தோ ஶ்ரீ நஜிப் ரசாக்கின் தாய் விரைவில் குணமடைவார் என்று நம்புவதாக எம்.சி.ஏ தலைவர் டத்தோ ஶ்ரீ டாக்டர் வீ கா சியோங் தெரிவித்துள்ளார்.
துன் ரஹா முகமட் நோவா விரைவாக குணமடையட்டும். நல்ல ஆரோக்கியத்துடன் இருக்க வேண்டும் என்று வீ தனது முகநூலில் வெள்ளிக்கிழமை (டிசம்பர் 18) வெளியிட்ட அறிக்கையில் தெரிவித்துள்ளார். வீ நஜிப் மற்றும் அவரது தாயார் ரஹாவின் புகைப்படத்தையும் வெளியிட்டார்.
இரண்டாவது பிரதமர் துன் அப்துல் ரசாக் ஹுசைனின் துணைவியான ரஹா பிரின்ஸ் கோர்ஸ்ட் மருத்துவ மையத்தில் தங்க வைக்கப்பட்டுள்ளார்.
பிரதமர் டான் ஸ்ரீ முஹிடின் யாசின் வியாழக்கிழமை (டிசம்பர் 17) மருத்துவமனையில் அவரைச் சந்தித்தார். அங்கு ரஹாவின் உடல்நலம் மற்றும் நல்வாழ்வுக்காக பிரார்த்தனை செய்ய மலேசியர்களை அவர் அழைத்தார்.
87 வயதான ரஹா, அப்துல் ரசாக்கை செப்டம்பர் 4, 1952 அன்று திருமணம் செய்தார். இந்த தம்பதியருக்கு சிஐஎம்பி வங்கியின் முன்னாள் தலைவர் டத்தோ ஶ்ரீ மொஹமட் நசீர் ரசாக், டத்தோ அஹ்மத் ஜோஹரி, டத்தோ முகமது நிஜாம் மற்றும் டத்தோ மொஹமட் நாஜிம் உள்ளிட்ட ஐந்து மகன்கள் உள்ளனர்.