ஜோசப் ஸ்டாலின்
லெனின் மறைவுக்குப் பின், சோவியத் ஒன்றியத்தின் பொதுவுடைமைக் கட்சியின் மத்தியக்குழுவில் 1922 முதல் அவர் 1953 வரை, தலைவராக விளங்கினார். இவருடைய திட்டமிட்ட பொருளாதாரக் கொள்கை, புதிய பொருளாதாரக் கொள்கையுன் கூடிய ஐந்தாண்டுத் திட்டங்களால் ரஷ்யா மிகப்பெரிய தொழில்புரட்சியைக் கண்டது. அதன் பொருளாதாரம் மேம்பட்டது.
ஸ்டாலின் காலத்தில் செய்யப்பட்ட பொருளாதாரச் சீரமைப்புகள் குறும் நோக்கிலும் தொலைநோக்கிலும் பல உணவுப்பட்டினி போன்று பல பாதகமான விளைவுகளையும் தோற்றுவித்தது என்று சொல்லப்படுகிறது.
இவரது ஆட்சியில் சோவியத் ஒன்றியம் இரண்டாம் உலகப் போரில் வெற்றிபெற்று, வல்லரசு ஆனது. 1930-களில் இவர் ஏற்படுத்திய அரசியல் தூய்மைபடுத்தல் கொள்கையைப் பொதுவுடமைக் கட்சியின் அறிக்கையாக, கொள்கையாகக் கடைப்பிடித்ததால், ஒழுக்கமின்மை, நம்பிக்கைத் துரோகம், நயவஞ்சகம், ஊழல் என்று குற்றம்சாட்டி பல்லாயிரக் கணக்கானோரை படுகொலை செய்ததாகச் சொல்லப்படுகிறது.
இதனால் பயங்கரவாதி என்றும் அழைக்கப்பட்டார். இரண்டாம் உலகப்போர் நடந்து கொண்டிருந்த போதே ஸ்டாலினின் உடல்நிலை பாதிக்கட்டது.
இவரின் அதிக புகைப்பிடிக்கும் பழக்கத்தால் தமனிக்கூழ்மைத் தடிப்பு ஏற்பட்டது. அக்டோபர் 1945- ஆம் ஆண்டு இவருக்கு இதயத்திசு இறப்பு ஏற்பட்டதால் மரணமடைந்ததாகக் கூறப்படுகிறது.