ஃப்ரேசர் மலைப்பாதையில் பாறைகள் சரிவு- போக்குவரத்து மூடல்

குவந்தான்

இங்கிருந்து சுமார் 165 கிலோமீட்டர் தொலைவில் உள்ள ஜாலான் ரவுப்-புக்கிட் ஃப்ரேசர் சாலை இன்று அதிகாலை 5.50 மணியளவில் நிகழ்ந்த மண்சரிவினால்  முழுமையாக மூடப்பட்டுள்ளது.

பகாங் தீயணைப்பு மீட்புத் துறை (ஜேபிபிஎம்) தலைவர் ஷாருல்னிஸாம் நசீர் கூறுகையில், கடந்த மூன்று நாட்களாக அடிக்கடி பெய்த மழையால் பாறைகள்  சரிந்து விழுந்து வருகின்றன என்றார்.

இதற்கு முன்னர் ஒரே இடத்தில் பல மரங்கள் சரிந்து விழுந்ததாக அறிவிக்கப்பட்டது, ஆனாலும் சாலை சீர் செய்யப்பட்டு திறக்கப்பட்டது. 

இருப்பினும், இன்று அதிகாலை நிகழந்த பாறைச் சரிவுகளால் சாலைப் பயன்பாடு முற்றிலுமாக மூடப்படவேண்டியாதாயிற்று. தொடர்ந்து  கற்பாறைகளை அகற்றுவதற்கான பணிகளைப் பொதுப்பணித்துறை மேற்கொண்டுவருகிறது (பி.டபிள்யூ.டி)  என்று அவர் கூறினார்.

முதலில், பாறைகளைச் சிறிய அளவுகளாக உடைப்பது போன்ற மாற்று வழிகளை  பொதுப்பணித்துறை மேற்கொண்டிருக்கிறது.

பிரபல சுற்றுலாத் தளமான புக்கிட் ஃபிரேசர் மலைக்குச் செல்ல விரும்புவோர் இப்போதே மாற்று வழியைப் பயன்படுத்துமாறு அறிவுறுத்தபட்டிருக்கின்றனர். 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here