மருத்துவமனை மாடியில் இருந்து குதித்த நோயாளி மரணம்

 

குவந்தான்_

இங்குள்ள தெங்கு அம்புவான் அப்சான் மருத்துவமனை கட்டடத்தின் நான்காவது மாடியில் இருந்து ஒருவர் குதித்து மரணமடைந்தவர் புற்றுநோய் நோயாளி என நம்பப்படுகிறது.

குவந்தான் மாவட்ட காவல்துறைத் தலைவர் ஏ.சி.பி மொஹமட் நூர் யூசோப் அலி இதுபற்றி கூறுகையில், அதிகாலை 2.25 மணியளவில் ரத்த வெள்ளத்தில் கிடந்த 55 வயது நோயாளி புதன்கிழமை முதல் எச்.டி.ஏ.ஏ பிரிவில்  சிகிச்சை பெற்று வந்ததாகத் தெரிகிறது.

இறந்தவரின் மனைவி இதுபற்றிக் கூறுகையில், தனது கணவர் கடந்த ஆண்டு முதல் நான்காம்நிலை தைராய்டு புற்றுநோயால் பாதிக்கப்பட்டிருந்தாகவும் பெரும்பாலும் கீமோதெராபிக் சிகிசைக்காக இம்மருத்துமனைக்குச் சென்றதாகவும் கூறினார்.

கடந்த சில நாட்களாகவே கடுமையான தலைவலி இருப்பதாக அவர் புகார் அளித்ததும் புரிந்து கொள்ளப்பட்டது.

வலியின் காரணமாக மருத்துவமனை கட்டடத்திலிருந்து அவர் குதித்ததாக நம்பப்படுவதாக ஏசிபி முஹமட் நூர் இன்று செய்தியாளர்களிடம் கூறினார்.

இங்குள்ள மாரான் ஸ்ரீ ஜெயாவிலிருந்து இறந்தவரின் உடல் மருத்துவமனையின் தடயவியல் துறைக்கு அனுப்பப்பட்டுள்ளதாக அவர்  மேலும் கூறினார். 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here