தனது 14 வயது மகனை பாலியல் வன்கொடுமை செய்த தாய்க்கு காவல் நீட்டிப்பு

ஷா ஆலம்: தனது 14 வயது மகனை பாலியல் வன்கொடுமை செய்ததாகக் கூறப்படும் தாய்க்கு எதிரான காவலில் வைக்க உத்தரவு 3 நாட்களுக்கு நீட்டிக்கப்பட்டுள்ளது.ம்கோல சிலாங்கூர் மாவட்ட காவல்துறைத் தலைவர் ரம்லி காசா கூறுகையில் 33 வயதுடைய பெண்ணுக்கு எதிரான காவலில் வைக்க உத்தரவு கோலா சிலாங்கூர் மாஜிஸ்திரேட் நீதிமன்றத்தால் பிறப்பிக்கப்பட்டது.

மே 10ஆம் தேதி வரை காவலில் வைக்க உத்தரவு நீட்டிக்கப்பட்டுள்ளது என்றார். அடையாளம் தெரியாத நபரிடமிருந்து பெறப்பட்ட வீடியோ மூலம் துஷ்பிரயோகம் குறித்த தகவலைப் பெற்ற சமூக நலத் துறை அதிகாரி ஒருவரிடமிருந்து போலீசார் புகாரைப் பெற்ற பின்னர், செவ்வாயன்று சிலாங்கூரில் உள்ள ஷா ஆலம், புஞ்சாக் ஆலத்தில் உள்ள அவரது வீட்டில் பெண் கைது செய்யப்பட்டார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here