சம்பல்பூர்-
ஒடிசா மாநிலம் சம்பல்பூர் மாவட்டத்தில் இன்று அதிகாலை 2 மணியளவில் புரி-சூரத் எக்ஸ்பிரஸ் ரயில் மோதியதில் ஒரு யானை உயிரிழந்துள்ளது.
ஹாதிபரி, மானேஸ்வர் ரயில் நிலையங்களுக்கு இடையே இந்த சம்பவம் நடந்துள்ளது. யானை மீது மோதியதால் ரெயில் தடம்புரண்டது. அதிகாரிகள் சம்பவ இடத்திற்கு வந்து ஆய்வு செய்தனர்.
இதுதொடர்பாக விசாரணைக்கு உத்தரவிட்டுள்ளது. இதன்படி விசாரணை நடைபெற்று வருவதாக மாவட்ட வனத்துறை அதிகாரி தெரிவித்தார்.
விபத்து நடந்த பகுதியில் யானைகள் நடமாட்டம் அதிகம் உள்ளதால், குறைந்த வேகத்தில் ரயில்களை இயக்கும்படி உத்தரவிடப்பட்டுள்ளது.
50 கிமீ வேகத்தில் ரயில் சென்றபோதும், யானை திடீரென குறுக்கே வந்ததால் விபத்து ஏற்பட்டதாக ரயில்வே நிர்வாகம் தெரிவித்துள்ளது.