கட்சி மாறிய மனைவிக்கு விவாகரத்து நோட்டீஸ்

கொல்கத்தா-
மேற்கு வங்கத்தில்  சேர்ந்த எம்பி சமுத்திரா கானின் மனைவி நேற்று திரிணாமுல் காங்கிரஸ் கட்சியில் சேர்ந்தார்.
அதைத் தொடர்ந்து அவருக்கு சமுத்திராகான் விவாகரத்து நோட்டீஸ் விடுத்திருப்பது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
கடந்த சில நாட்களாக திரிணாமுல் காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த முக்கிய தலைவர்கள் அக்கட்சியில் இருந்து விலகி பாஜவில் இணைந்து வருகின்றனர்.
இந்நிலையில் திடீர் திருப்பமாக பாஜ எம்பியான சமுத்திரா கான் மனைவி சுஜாதா மண்டல் கான் நேற்று திரிணாமுல் காங்கிரஸ் கட்சியில் இணைந்தார்.
“விசுவாசமானவர்களை விட, தவறான ஊழல் தலைவர்கள்தான் பாஜ கட்சியில் அதிக முக்கியத்துவம் பெறுகிறார்கள் என சுஜாதா குற்றம்சாட்டினார். 

இதற்கிடையே, மனைவி கட்சி மாறியதால் ஆத்திரமடைந்த சமுத்திராகான் அவருக்கு விவாகரத்து நோட்டீஸ் அனுப்பி உள்ளார். ‘

எங்களது பத்து ஆண்டு உறவு துண்டிக்கப்படுகின்றது. கணவன், மனைவிக்கு இடையே பிரிவினையை ஏற்படுத்துவதற்கு தயங்காத சிலரால் நீங்கள் தவறாக வழிநடத்தப்படுகிறீர்கள்.

தயவு செய்து கான் என்ற பெயரை பயன்படுத்துவதை தவிர்க்கவும். சமுத்திரா கானின் மனைவி என எங்கும் குறிப்பிட வேண்டாம். 2019 இல் நான் பாஜவில் சேர்ந்தபோது உங்களது பெற்றோரை தாக்கியவர்களுக்கு ஆதரவாக நீங்கள் இருக்கிறீர்கள் என்பதை மறந்துவிடாதீர்கள் என நோட்டீசில் சமுத்திரா கான் கூறி உள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here