ஹாங்காங்-
இதற்கிடையில், ஹாங்காங்கின் மிகப்பெரிய பத்திரிக்கை நிறுவனமாக செயல்பட்டுவரும் நாளிதழ் ஆப்பிள் டெய்லி நாளிதழ்.
அந்த சோதனையில், ஆப்பிள் டெய்லி பத்திரிக்கை அலுவலக இடத்தை ஒப்பந்தத்தை மீறி பயன்படுத்தியதாக ஜிம்மி லேய், அவரது 2 ஊழியர்கள் மீது குற்றம்சுமத்தப்பட்டு 3 பேரும் ஹாங்காங் அதிகாரிகளால் கைது செய்யப்பட்டனர்.
கைது செய்யப்பட்டவர்களில் ஆப்பிள் டெய்லி பத்திரிக்கை உரிமையாளர் மீது தேசிய பாதுகாப்பு சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டது. ஹாங்காங்கில் மிகவும் செல்வாக்குப் பெற்ற நபரான ஜிம்மி லேய் தேசிய பாதுகாப்பு சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்ட சம்பவம் ஹாங்காங்கில் பரபரப்பை ஏற்படுத்தியது.
ஜாமீன் மூலம் சிறையில் இருந்து விடுதலை செய்யப்பட்ட பின்னர் ஜிம்மி லேய் தனது வீட்டை விட்டு வெளியே செல்லக்கூடாது. வெளிநாட்டு பயணங்களுக்கு தேவையான அனைத்து ஆவணங்களையும் அதிகாரிகளிடம் ஒப்படைக்க வேண்டும், வெளிநாட்டு அதிகாரிகளுடன் எந்த வித ஆலோசனையும் நடத்தக்கூடாது, செய்திநிறுவனங்களிடம் பேச தடை
விதிக்கப்படுகிறது, எந்த வித அறிக்கையும் வெளியிடக்கூடாது, சமூகவலைதளங்களில் எந்த வித கருத்துக்களையும் பதிவிடக்கூடாது என கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளது.
நிபந்தனை ஜாமீன் வழங்கப்பட்டபோதும் ஜிம்மி லேய் வீட்டுச்சிறையில் வைக்கப்படும் சூழல் உருவாகியுள்ளது. மேலும், அவர் வெளிநாடு தப்பிச்செல்வதை தடுக்கவும் நடவடிக்கை எடுக்கப்ப்பட்டுள்ளது. பல நாட்கள் சிறை தண்டனைக்கு பின்னர் ஜிம்மி லேய் நிபந்தனை ஜாமீன் வழங்கப்பட்டுள்ள நிகழ்வு ஹாங்காங்கில் பேசுபொருளாகியுள்ளது.