கூட்டரசுப் பிரதேச துணை அமைச்சர் தலைமையில் கோயில்களுக்கு நிலப்பட்டா

புத்ராஜெயா, இஸ்லாம் அல்லாத வழிபாட்டுத் தலங்களின்அலுவலகத்தில் (RIBI) மாத  கட்டமாக நிரந்தரப் பதிவுசெய்யப்பட்ட நிலப்பட்டாக்கள் வழங்கும் நிகழ்ச்சி  அண்மையில் நடைபெற்றது.

கோலாலம்பூரில் அமைந்துள்  ஸ்ரீ முனிஸ்வரர் ஆலயம், ஜாலான் ஆங் செங், பிரிக்பீல்ட்ஸ். ஸ்ரீ மகா ஷாண்டி அம்மன் ஆலயம், தாமான் யாழ், ஸ்ரீ மகா முனிஸ்வரர் ஆலயம், ஜாலான் டெலாபான், கம்போங் பண்டான் ஆகிய மூன்று கோயில்களுக்கு கூட்டரசு வளாகத் துணைஅமைச்சர் டத்தோ ஸ்ரீ எட்மண்ட் சந்திரா அவர்கள் நிரந்தரப்பதிவு செய்யப்பட்ட நிலப்பட்டாக்கள் வழங்கினார்.

மலேசியா இந்து சங்கத்தின் கூட்டரசுப் பிரதேசத்தலைவர் மாணிக்கவாசகம் மற்றும் அவரின் குழுவினரின் ஒத்துழைப்பில் இந்த நிலப்பட்டா கிடைத்ததாக பட்டா பெற்று கொண்ட ஆலயப் பொறுப்பாளர்கள் தெரிவித்தனர்.

கூட்டரசு வளாகத் துணை மைச்சரும் இஸ்லாம்அல்லாத வழிபாட்டுத்  தளங்களில்  ஒருங்கிணைப்பாளருமான(RIBI), டத்தோ ஸ்ரீ சந்தாரா குமார் கூட்டரசுப் பிரதேச மலேசியா இந்து சங்கம், நில கனிமவள அலுவலகம் (PTG), கூட்டரசு வளாகநகராண்மைக் கழகம், மின்சார வாரியம், தேசியப்பொதுப்பணி அமைச்சு போன்ற அரசு நிறுவனங்களுடன் இணைந்து நடத்திய கூட்டுமுயற்சி, தொடர்ச்சியான சந்திப்புகளுக்குப் பிறகு இந்தக் கோயில்களின் நில இடமாற்றம், நிலப்பட்டா வழங்குதலுக்கான ஒப்பந்தம் வெற்றிகரமாக நிறைவேறியுள்ளது.

இவ்வேளையில்  மணிக்வாசகம், ஆலயபிரச்சனையைத் தீர்த்து வைக்கும் பணியில் முழுமூச்சாகஈடுபட்டு உறுதியான ஆதரவு, ஒத்துழைப்பு மற்றும் உடனடி நடவடிக்கைகளுக்கும் முக்கியப் பங்காற்றிய மாநிலத்துணை அமைச்சர் டத்தோ ஸ்ரீ  சந்தாரா குமார், கூட்டரசுவளாக நில கனிம அலுவலக இயக்குனர், உயர்திரு முகமதுயசீர் பின் யாஹ்யா அவர்கள் மற்றும் அனைத்து அரசு நிறுவனங்களுக்கு நன்றி தெரிவித்துக் கொண்டார்.

கோயில்களின் பெயர்களில் பதிவு செய்யப்பட்ட புதிய இருப்பிட தளங்களை பாதுகாக்க விரைவில் RIBI மற்றும் மலேசியா இந்து சங்ககூட்டரசு வளாகம் இடையில் இரண்டாம் மற்றும் மூன்றாம் கட்டச் சந்திப்புக் கூட்டம் நடைபெறும் என்று தெரிவித்தார்.

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here