சிவகங்கை அருகே பிரமிக்க வைக்கும் அதிசயப் பாறைகள்!

சிவகங்கை அருகே பல்வேறு அமைப்புகளுடன், காற்றில் கரையும் அதிசயப் பாறைகள் காணப்படுகின்றன. இந்தப் பாறைகள் காண்போரை பிரமிக்க வைக்கின்றன.

வரலாற்றுச் சிறப்பு மிக்க சிவகங்கையில் பல்வேறு தொல்லியல் எச்சங்களும், இயற்கையான அமைப்புகளும் காணப்படுகின்றன. திருமலையில் இருந்து மலம்பட்டி வரை ஆங்காங்கே சிறு, சிறு மலைக்குன்றுகள் காணப்படுகின்றன. இதில் ஏரியூர் மலைக்குன்றில் 15 டன் எடை கொண்ட ஆகாச பாறை உள்ளது.

இந்தp பாறை நுனியில் நிற்கிறது. அதே போல், அதன் அருகில் சில கி.மீ. தொலைவில் திருமன்பட்டி பகுதியில் உள்ள குன்றில், பல்வேறு வடிவங்களில் அடுக்கி வைத்தாற்போல் பாறைகள் காணப்படுகின்றன.

இந்தப் பாறைகளை அருகில் சென்று பார்த்தால் உருண்டு விடுமோ என்ற அச்சம் ஏற்படும். ஆனால், பல நூறு ஆண்டுகளாக இந்தப் பாறைகள் அப்படியே உள்ளன.

பல ஆண்டுகளாகத் தொடர்ந்து வீசும் காற்றால் சற்று சேதமடைந்து பாறைகள் கரைந்து வருகின்றன. அருகிலேயே மூன்று நபர்கள் சென்று வரும் அளவுக்கு நரி குகையும் உள்ளது. இந்தக் குகை கோடைக்காலத்திலும் குளிர்ச்சியைத் தரும்.

இதேபோல் ஏராளமான அடுக்குப் பாறைகள் உள்ளன. அவற்றை சுற்றுலாத் தலமாக அறிவிக்க வேண்டுமென அப்பகுதி மக்கள் வலியுறுத்தி வருகின்றனர்.

சிவகங்கை மாவட்டத்தில் பல்வேறு அறியப்படாத சுற்றுலாத் தலங்கள் உள்ளன. காற்றில் கரையும் அதிசய பாறைகள் திருமண்பட்டி-மலம்பட்டி அருகே உள்ள குன்றில் காணப்படுகின்றன. அவை ஏரியூர் ஆகாசப்பாறை போன்று உள்ளன. ராணுவ நடை போல கம்பீரமாக அமைந்திருக்கிறது.

ஒவ்வொரு பாறையும் கூழாங்கற்களை அடுக்கியது போல் அழகுறக்காட்சித் தருகிறது. வனத்துறை கட்டுப்பாட்டில் இருக்கும், இந்த இடத்தில் ஏராளமான சுனைகளும் உள்ளன. இவை பெரும்பாலும் வற்றுவதில்லை.

திருமலை, ஏரியூர், திருமன்பட்டி பகுதியைச் சுற்றுலாத் தளமாக அறிவித்தால் இப்பகுதி மக்களின் வாழ்வாதாரம் மேம்படும் என்றார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here