ஆமையை கடத்தியது சர்வதேச வணிகக் கும்பல் – முதலைப் பண்ணை இயக்குநர்

சென்னை முதலை பண்ணையில் அறிய வகை அல்டாப்ரா ஆமையை கடத்தியது சர்வதேச வணிகக் கும்பல் என முதலைப் பண்ணை இயக்குநர்.
சென்னை அடுத்துள்ள மாமல்லபுரத்தில் உலகின் இரண்டாவது மிகப்பெரியது என்ற பெருமைக்கு சொந்தமான அல்டாப்ரா என்ற 55 வயதுடைய ஆமை, முதலைp பண்ணையில் இருந்து காணாமல் போயுள்ளதாக காவல்துறை தெரிவித்திருந்தது. சர்வதேச சந்தையில் இந்த ஆமையின் மதிப்பு ரூ.10 லட்சம் என்று கூறப்பட்டது.
அல்டாப்ரா ஆமை 150 ஆண்டுகள் வரை உயிர் வாழும். 1.5 மீட்டர் நீளத்திற்கு வளரக்கூடிய இந்த ஆமை 200 கிலோ வரை எடை இருக்கும்.
சென்னை முதலை பண்ணையிலிருந்த இந்த இனத்தைச் சேர்ந்த நான்கு ஆமைகள் இருந்துள்ள நிலையில், 55 வயது மதிக்கத்தக்க ஆமை ஒன்று மாயமானது. இதுகுறித்து காவல்துறை கூறுகையில், சுமார் ஆறு வாரங்களுக்கு முன்பே இந்த திருட்டுச் சம்பவம் நடந்துள்ளது. திருடியவர்கள், அருகிலுள்ள எந்த கண்காணிப்பு கேமராவிலும் சிக்காமல் இந்த சம்பவத்தை மேற்கொண்டுள்ளனர் என்றும் இந்த சம்பவத்தில் ஈடுபட்டவர்களை தேடி வருகிறோம் என தெரிவித்திருந்தனர்.
இந்நிலையில், சென்னை முதலைp பண்ணையில் அறிய வகை அல்டாப்ரா ஆமையைk கடத்தியது சர்வதேச வணிகக் கும்பல் என முதலைப் பண்ணை இயக்குநர் ஆல்வின் ஜேசுதாஸ் தெரிவித்தாக கூறப்படுகிறது.
முதலைப்பண்ணையின் 44 ஆண்டு வரலாற்றில் நடைபெற்ற முதல் திருட்டு இதுதான் என்றும் தெரிவிக்கப்படுகிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here