சென்னை-
எந்தெந்த வேலைகளுக்கு எவ்வளவு லஞ்சம் பெறப்படுகிறது என்ற பட்டியலை மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் இன்று வெளியிட்டார். அதில், அரசு மருத்துவமனைகளில் பெண் குழந்தை பிறந்தால் ரூ. 300, ஆண் குழந்தை பிறந்தால் ரூ. 500 லஞ்சம் பெறுகின்றனர். தமிழகத்தில் அனைத்து துறைகளிலும் லஞ்சம் வாங்குவது அதிகரித்துள்ளது என குறிப்பிட்டுள்ளார்.
கட்சி தொடங்குவதில் நாடகமாடுகிறாரா ரஜினிகாந்த் என்ற கேள்விக்கு உடல்நலம் தான் முக்கியம் என பதில் அளித்தார். ரஜினிகாந்தின் உடல்நலத்தின் அடிப்படையில் யூகமான தகவல்களை வெளியிடக்கூடாது.