நிலவில் நிலம் வாங்கி கொடுத்த கணவர்!

பிரேசிலில் வசித்து வரும்  தர்மேந்திரா என்பவர் தனது மனைவியான சப்னா அனிஜாவுக்கு எட்டாம் ஆண்டு திருமண நாள் பரிசு வழங்குவதற்காக நிலவில் 3 ஏக்கர் நிலம் வாங்கி கொடுத்துள்ளார்.

பூமியில் ஒரு சென்டில் நிலம் வாங்குவதே கனவாக இருந்து வருகிற நிலையில், தனது ஆசை மனைவிக்காக எட்டாம் ஆண்டு திருமண நாளில் நிலவில் நிலம் வாங்கி கொடுத்து அசத்தியுள்ளார் தர்மேந்திரா என்பவர்.

பிரேசிலில் வசித்து வரும் இவர், தனது மனைவியான சப்னா அனிஜாவுக்கு எட்டாம் ஆண்டு திருமண நாள் பரிசு வழங்குவதற்காக நிலவில் 3 ஏக்கர் நிலம் வாங்கி கொடுத்துள்ளார்.

தர்மேந்திரா தமது மனைவிக்கு திருமண நாள் கேக் வெட்டியதும், மணநாள் பரிசாக நிலவில் நிலம் வாங்கிய பதிவு சான்றிதழ் கொடுத்து இன்ப அதிர்ச்சி அளித்துள்ளார்.

நிலவில் வசிப்பதற்கான குடியுரிமையும், இதற்கான சான்றிதழை நியூயார்க்கில் உள்ள அமெரிக்க லூனா சொசைட்டி என்ற நிறுவனம் பெற்றுள்ளது.

இந்நிலையில், மறைந்த நடிகர் சுஷாந்த் சிங் ராஜ்புட், ஷாருக்கான் உள்ளிட்ட பாலிவுட் பிரபலங்களும், டாம் குரூஸ் போன்ற ஹாலிவுட் நட்சத்திரங்களும் நிலவில் இடம் வாங்கி உள்ளது குறிப்பிடத்தக்கது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here