மதத்தால் பிரித்த ஜோடியை சேர்த்து வைத்த உயர் நீதிமன்றம்

அலகாபாத்-
உத்தரப்பிரதேசத்தின் கொல்வாலியை சேர்ந்தவர் ஷிகா. இவர் ஈடா பகுதியைச் சேர்ந்த சல்மான் என்பவரை திருமணம் செய்து கொண்டார். சல்மான் தங்களது மகளை கடத்தி திருமணம் செய்து கொண்டதாக ஷிகாவின் பெற்றோர் காவல்நிலையத்தில் புகார் கொடுத்தனர்.
புகாரின் பேரில் சல்மானிடம் இருந்து ஷிகாவை பிரித்த போலீசார் அவரது பெற்றோரிடம் ஒப்படைத்தனர். இந்நிலையில் சல்மான் அலகாபாத் உயர்நீதிமன்றத்தில் ஆட்கொணர்வு மனு ஒன்றை தாக்கல் செய்தார்.
இதில் தனது மனைவியின் விருப்பத்திற்கு மாறாக அவரை தன்னிடம் இருந்து அவரது பெற்றோர் பிரித்து அழைத்து சென்றுவிட்டதாக கூறியிருந்தார். 

இதனை தொடர்ந்து உயர்நீதிமன்ற நீதிபதிகள் பங்கஜ் நக்வி , விவேக் அகர்வால் ஆகியோர் அடங்கிய அமர்வின் முன் ஷிகா ஆஜர்படுத்தப்பட்டார்.

அப்போது ஷிகா தனது பிறப்பு சான்றிதழ் ஆவணங்களைச் சமர்பித்தார். அதன்படி அவருக்கு 21 வயதாகிறது. இதனை தொடர்ந்து நீதிபதிகள், இளம்பெண் அவரது சுய விருப்பத்தின் பேரில் சல்மானை திருமணம் செய்து கொண்டுள்ளார்.அவர்கள் சேர்ந்து வாழ்வதற்கு நீதிமன்றம் அனுமதிக்கிறது என்று உத்தரவிட்டனர். 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here