ப்திய போன்களுக்கு சார்ஜர் இனி வழங்கப்படாது

ஜியோமி செல்போன்களுக்கு சார்ஜர் வழங்கப்படாது என்று தகவல் வெளியாகியுள்ளது.

பொதுவாக செல்போன் வாங்கும் போது அதனுடன் சார்ஜரும் தருவது தான் வழக்கம். முன்பெல்லாம் செல்போனுடன் ஹெட் போனும் தந்து கொண்டிருந்தனர். ஆனால் பிறகு அது நிறுத்தப்பட்டது.

தற்போது சார்ஜரும் தரப்படாது என்ற அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது. ஜியோமி நிறுவனம் அறிமுகம் செய்யவுள்ள எம்.ஐ 11 போனுடன் சார்ஜர் வழங்கப்படாது என தெரிவிக்கப்பட்டுள்ளது.

சுற்றுச்சூழலை பாதுகாக்கும் பொருட்டு இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாகவும், இந்த முடிவை வாடிக்கையாளர்கள் இப்போது ஏற்காவிட்டாலும், எதிர்காலத்தில் விரும்புவார்கள் என அந்நிறுவனம் தெரிவித்துள்ளது.

ஆப்பிள் நிறுவனம் செல்போனுடன் சார்ஜர் வழங்கப்படாது என ஏற்கனவே கூறிவிட்டது. அதனைத் தொடர்ந்து ஜியோமி தற்போது கூறியுள்ளது.

இந்நிலையில் அனைத்து செல்போன் நிறுவனங்களும் இதே முடிவை எடுத்துவிடுமோ என்று வாடிக்கையாளர்கள் அச்சத்தில் உள்ளனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here