ஈராக் முன்னாள் அதிபர் சதாம் உசேன் தூக்கிலிடப்பட்ட நாள் – டிச.30- 2006

சதாம் உசேன்
சதாம் உசேன் 1937 ஆம் ஆண்டு பிறந்தார். இவர் ஜூலை 16, 1979 இல் இருந்து ஏப்ரல் 9, 2003 வரை அமெரிக்கா தலைமையிலான ஈராக் படையெடுப்பு வரையில் இவர் அந்நாட்டின் அதிபராக இருந்தார். 
ஐக்கிய அமெரிக்க மாநிலங்கள், அதன் கூட்டாளிகள் இணைந்து மேற்கொண்ட 2003 ஈராக் போருக்குப் பிறகு சதாமின் ஆட்சி கவிழ்க்கப்பட்டது.

டிசம்பர் 13, 2003 ஆம்நாள் திக்ரித்துக்கு வெளியே உள்ள பாதாள அறை ஒன்றில் ஒளிந்திருந்த சதாமை அமெரிக்கப் படையினர் கைது செய்தனர்.

பல மனித உரிமை மீறல் வழக்குகள் தொடர்பாக இடைக்கால ஈராக் அரசு அமைத்திருக்கும் சிறப்பு நீதிமன்றத்தில் சதாம் விசாரிக்கப்பட்டார்.
நவம்பர் 5, 2006 இல் அவருக்கு தூக்குத் தண்டனைத் தீர்ப்பு வழங்கப்பட்டது.

டிசம்பர் 26, 2006 இல் சதாமின் மேல்முறையீடு நிராகரிக்கப்பட்டு மரணதண்டனை உறுதி செய்யப்பட்டது.

டிசம்பர் 30, 2006 உள்ளூர் நேரம் 06:05 மணிக்கு அவர் தூக்கிலிடப்பட்டார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here