வாஷிங்டன்:
இதற்கிடையே கொரோனா தடுப்புக்கான மாடர்னா மருந்து கண்டறியப்பட்டது அந்நாட்டு மக்களுக்கு ஆறுதலை ஏற்படுத்தியது.
சமீபத்தில் நடந்து முடிந்த அதிபர் தேர்தலில் ஜோ பிடன் அமெரிக்காவின் அடுத்த அதிபராகத் தேர்வு செய்யப்பட்டார். அடுத்த ஆண்டு ஜனவரியில் அவர் பதவி ஏற்க இருக்கிறார்.
அமெரிக்காவின் டெலாவேர் மாகாணத்தில் நியூவார்க் நகரில் உள்ள மருத்துவமனை ஒன்றில் கடந்த 22- ம் தேதி அதிபராக தேர்வான ஜோ பைடனுக்கு கொரோனா தடுப்புக்கான பைசர் மருந்தின் முதல் டோஸ் உட்செலுத்தப்பட்டது.
இந்நிலையில், அமெரிக்காவின் துணை அதிபராக தேர்வான கமலா ஹாரிஸ் மற்றும் அவரது கணவர் ஆகியோருக்கு கொரோனா தடுப்புக்கான மாடர்னா மருந்தின் முதல் டோஸ் உட்செலுத்தப்பட்டது.
அப்போது பேசிய கமலா ஹாரிஸ், தடுப்பூசி போட்டுக் கொள்வது மிக எளிதானது. நன்றி, அதனை அனைவரும் எடுத்துக் கொள்ளுங்கள். இரண்டாவது தடுப்பூசி பெற ஆவலுடன் காத்திருக்கிறேன்.