இந்த நிலையில் நேற்று முன்தினம் யாகநாதன் பிள்ளை வீட்டில் தனது மகளுடன் இருந்தார். அப்போது 2 பேர் அவர் வீட்டின் கதவை தட்டினர். இதையடுத்து யாகநாதன் பிள்ளை வீட்டின் கதவை திறந்தார். அப்போது வாசலில் நின்று கொண்டிருந்ததால் மர்மநபர்கள் 2 பேர் அவரை துப்பாக்கியால் சரமாரியாகச் சுட்டனர். இதில் அவர் ரத்த வெள்ளத்தில் சரிந்து சம்பவ இடத்திலேயே துடிதுடித்து இறந்தார்.
இதனைத் தொடர்ந்து அந்த மர்ம நபர்கள் 2 பேரும் அங்கிருந்து தப்பி ஓட முயன்றனர். ஆனால், அந்தப் பகுதியைச் சேர்ந்த யாகநாதன் பிள்ளையின் சமூக மக்கள் அவர்களை விரட்டிச் சென்று மடக்கினர். பின்னர் அவர்களைச் சரமாரியாக தாக்கி கத்தியால் குத்திக்கொலை செய்தனர். அதோடு நிற்காமல் அவர்களது தலையை துண்டித்து, உடல்களை பொதுமக்கள் பார்வையில் படும்படி வீதியில் வைத்தனர்.