ஓடும் ரயிலில் 30 ஜோடிகள்- சத்தமின்றி இச்.. இச்

2020  ஆம் ஆண்டு முழுவதும் கொரோனா போராட்ட ஆண்டாக போய்விட்டது. இனி 2021 ஆம் ஆண்டாவது இயல்பான ஆண்டாக இருக்கும் என்று நினைத்திருந்தால் மறுபடியும் அதே போராட்டம்.
கொரோனா ஓரளவுக்கு கட்டுக்குள் வந்துவிட்டது என்று இருந்த நிலையில், ரஷ்யாவில் தற்போது கொரோனா வைரஸ் வேகமாக பரவி வருகிறது.

இதனால் முன்பு இருந்ததை காட்டிலும் கடும் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டு வருகின்றன. இசைக்கச்சேரிகளுக்கு தடை விதிக்கப்பட்டிருக்கிறது. இரவு 11 மணிக்கு மேல் பார்களை மூட உத்தரவு போடப்பட்டிருக்கிறது. இதனல் அதிருப்திக்கு உள்ளானார்கள் ஒரு ஆலோசனை நடத்தி, தங்களுக்கு ஏற்பட்டிருக்கும் பிரச்சினையை வெளிப்படுத்த ஒரு போராட்டம் நடத்துவது என்று முடிவெடுத்துள்ளனர்.

அதன்படி, யெகாடெரின்பர்க்கில் மெட்ரோ ரயிலில் போகும்போது திடீரென்று முகக்கவசத்தை கழற்றிவிட்டு 30 ஜோடிகள் இறுக கட்டிப்பிடித்துக்கொண்டு உதட்டோடு உதடு வைத்து முத்த போராட்டம் நடத்தினர். இதை சற்றும் எதிர்பாராத ரயில் பயணிகள் அதிர்ச்சி அடைந்தனர். சிலர் செல்பி எடுத்துக்கொண்டனர்.

இந்த வீடியோ இணையங்களில் வைரலாகி வருகிறது. சிலர் இந்த முத்த போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்திருந்தாலும், பலர் எதிர்ப்பை தெரிவித்துள்ளனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here