மகளிருக்கான டிஜிட்டல் வங்கித்துறையில் கால் பதிக்கும் நிறுவனம்

தொழில்துறையின்  முன்னணி தயாரிப்பு நிறுவனங்களில்ஒன்றான  CNAsia Corporation Bhd( CNAsia) நிறுவனம் மக்ளிர் டிஜிட்டல் வங்கி வர்த்தகத்துறையில் தன்னை ஈடுபடுத்திக்கொண்டுள்ளது.

முன்னதாக  இதுதொடர்பில் இந்நிறுவனம்  Intcy Sdn Bhd (Intcys) நிறுவனத்துடன் உடன்படிக்கையில் கையெழுதிட்டது.

Woman Empowering Woman (MyWEW)  எனும் இத்திட்டமானது மகளிர் வளர்ச்சிக்கு, குறிப்பாக பொருளாதாரத்தைக் குறிவைத்துச் செயல்படும் உள்நாட்டு  அமைப்பாகும்.

கோவிட் -19 வைரஸ் தொற்று  காலக்கட்டத்தில் பெரும் நெருக்கடியை எதிர்நோக்கியவர்களில் பெண்களே அதிகமானவர்களாக இருந்தனர் என்றால் அது மிகையில்லை.

 வேலையிழந்து நிதிச்சுமையால் எதிர்நோக்கியிருந்தவர்களே அதிகம். இந்நிலையில் அவர்கள் டிஜிட்டல் வங்கிச்சேவையை, குறிப்பாக கடன், சிறுகடன்,கிரடிட் கார்டு, உட்பட பல்வேறு சேவைகளைப் பயன் படுத்த இவ்வமைப்பு பெரிதும் உதவும்.

நாட்டிலுள்ள மகளிர் பிரிவினர்களுக்கு உதவும் வகையில் இந்த டிஜிட்டல் வங்கி வர்த்தகம் பேருதவியாக இருக்கும் என இந்த அமைப்பின்  ஆலோசகரும் பெங்காராங் நாடாளுமன்ற  உறுப்பினருமான டத்தோஶ்ரீ அஸாலினா ஒஸ்மான் தெரிவித்தார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here