வாஷிங்டன்:
அமெரிக்க அரசின் அதிகாரப்பூர்வ இணையதள பக்கத்தில் அதிபர், துணை அதிபர் உள்ளிட்டோரின் விவரங்கள் தெரிவிக்கப்பட்டிருக்கும். தற்போதைய அதிபர் டிரம்பின் பதவி, அவரது விவகரங்கள் தொடர்பான விவரங்களும் உள்ளன.
இந்நிலையில், டொனால்டு டிரம்ப்பின் பதவிக் காலம் முடிவடைந்துவிட்டதாக அமெரிக்க அரசு இணைத்யதள பக்கத்தில் நேற்று பதிவு செய்யப்பட்டுள்ளது.
அரசின் இணையத்தள பக்கத்தில் டொனால்டு டிரம்பின் பதவிக்காலம் 11.1.2021 (நேற்று) இரவு 7 மணி 40 நிமிடம் 41 நொடியுடன் முடிவடைந்துவிட்டதாகத் தெரிவிக்கப்பட்டது.
இந்த சம்பவம் அமெரிக்க அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. பின்னர் சில நிமிடங்கள் கழித்து அந்தப் பதிவு நீக்கப்பட்டது. அதிபர் டிரம்பின் பதவிக் காலம் முடிவடைந்துவிட்டது என அரசு இணையத்தள பக்கத்தில் வெளியான பதிவு குறித்து அமெரிக்க அரசு தரப்பில் இருந்து எந்த விளக்கமும் அளிக்கப்படவில்லை.
அரசு இணையதள பக்கத்தில் டிரம்பின் அதிபர் பதவிக்காலம் முடிவடைந்துவிட்டது என வெளியான பதிவு ஹேக்கிங் செய்யப்பட்டதா? அல்லது அதிகாரிகள் வேண்டுமென்றே அவ்வாறு பதிவு செய்தனரா? என்பது குறித்த விவரம் தெரிவிக்கப்படவில்லை.