காதலியை பழிவாங்க 4 முறை தனிமைப்படுத்தி வைத்த சுகாதார அமைச்சக ஊழியர்!

காதலியைப் பழிவாங்க தனது அதிகாரத்தைத் தவறாகப் பயன்படுத்தி 4 முறை கொரோனா என்று சொல்லி தனிமைப்படுத்திவைத்த நபர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்.

இஸ்ரேல் நாட்டின் சுகாதார அமைச்சகத்தில் பணிபுரியும் அந்த நபர் தனது முன்னாள் காதலியை பழிவாங்க வேண்டும் என்று எண்ணிக்கொண்டிருந்த வேளையில், கொரோனா தாக்கம் வந்திருக்கிறது.

இதையே காரணமாக வைத்து, முன்னாள் காதலியின் செல்போனுக்கு, சுகாதாரத்துறை சார்பாக, தனிமைப்படுத்திக்கொள்ளவும் என்று மெசேஜ் அனுப்பியதால் அப்பெண்ணும் நம்பி தன்னை தனிமைப்படுத்திக்கொண்டார். அதன்பின்னரும் தனிமைப்படுத்திக்கொள்ள வந்தது மெசேஜ். அடுத்த முறையும் தன்னை தனிமைப்படுத்திக் கொண்டார்.

இப்படியே நான்கு முறை போனதும் அப்பெண்ணுக்கு சந்தேகம் வந்தது. தனக்கு கொரோனா அறிகுறிகள் இல்லை. ஆனாலும், தொடர்ந்து என்னை ஏன் தனிமைப்படுத்திக் கொள்ள சொல்கிறீர்கள் என்று கேட்டதும் சுகாதாரத்துறை அதிர்ந்தது.

விசாரணையில் அப்பெண்ணின் காதலர் செய்த வில்லங்கம் என்று தெரியவந்ததும், அவரை போலீசிடம் ஒப்படைத்தனர். போலீஸ் அந்த வாலிபரை விசாரித்து சிறையில் அடைத்திருக்கிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here