பீஜிங்:
இதில் சுரங்கத்தின் நுழை வாயில் பகுதி இடிந்து இதனால் சுரங்கத்துக்குள் இருந்த தொழிலாளர்கள் 22 பேர் வெளியேற முடியாமல் சிக்கிக் கொண்டனர். எனினும் சுரங்க நிர்வாகம் விபத்து நடந்த 30 மணி நேரத்துக்குப் பிறகு போலீஸ், மீட்புக் குழுவுக்கு தகவல் தெரிவித்தது.
மீட்பு பணிகள் தாமதமாக தொடங்கியதால் மீட்புக்குழுவினர் சுரங்கத்துக்குள் சிக்கி இருக்கும் தொழிலாளர்களை நெருங்குவதில் சிக்கல் எழுந்தது.
இது மீட்புக் குழுவிற்கு நம்பிக்கையையும் உத்வேகத்தையும் அளித்துள்ளது. இதையடுத்து நூற்றுக்கணக்கான மீட்புக்குழுவினர், தொழிலாளர்கள் 12 பேரையும் பத்திரமாக மீட்கும் முயற்சியில் தீவிரமாக இறங்கியுள்ளனர். அதேசமயம் மற்ற தொழிலாளர்கள் 10 பேரின் கதி என்ன என்பது இன்னமும் தெரியவில்லை.