குடியரசு நாள் விழா கலை நிகழ்ச்சிகள் திடீர் ரத்து ! அரசு அறிவிப்பு !!

கொரோனா வைரஸ் பெருநோய்த் தொற்றுப் பரவல் காரணமாக சென்னை மெரீனா கடற்கரையில் நடைபெறும் குடியரசுத் தின விழாவில் பள்ளி, கல்லூரி மாணவ, மாணவிகள் பங்கேற்கும் கலை நிகழ்ச்சிகள் ரத்து செய்யப்பட்டுள்ளதாக தமிழக அரசு அறிவித்துள்ளது.

இந்தியாவில் சுமார் 200 நுற்றாண்டுகளுக்கும் மேலாக ஆங்கிலேயர் ஆட்சி நீடித்து வந்தது. அவர்களது ஆட்சியை முடிவுக்குக் கொண்டுவரும் வகையில், புரட்சி , அகிம்சை வழியில் மக்கள் பெரும் போராட்டங்கள் நடத்தினர். இதில் பலர்  குருதி சிந்தி தாய் நாட்டிற்காக அர்பணித்தனர். அந்த தேசத் தலைவர்களையும், வீரர்களையும், நினைவுக்கூரும் நாள் குடியரசு தினம் ஆகும்.

ஆங்கிலேயர் ஆட்சியை முடிவுக்குக் கொண்டுவந்து, 1947 ஆம் ஆண்டு ஆகஸ்ட் 15 ஆம் நாள் இந்தியா விடுதலைப் பெற்றது. மக்களாட்சியால் மட்டுமே ஒரு நாட்டின் சிறப்பான வளர்ச்சியைப் பெற முடியும் என கருதி, டாக்டர் பி. ஆர். அம்பேத்கர் தலைமையில் இந்திய அரசியல் சட்டம் நிறைவேற்றப்பட்டு, 1950 ஜனவரி 26 முதல் குடியரசு தினம் கொண்டாடப்படுகிறது.

இதனால், குடியரசு தினம் தியாகிகளை நினைவுக்கூரும் வகையில் விடுமுறை அளிக்கப்பட்டு, நாடெங்கும் அனைத்து பள்ளிகளிலும், கல்லூரிகளிலும், அலுவகங்களிலும் தேசிய கீதம்பாடி கொடியேற்றி, இனிப்புகள் வழங்கி கொண்டாடப்பட்டு வருகிறது. மேலும், குடியரசுத் தின விழாவின் போது சுதந்திர போராட்ட வீரர்களை கவுரப்படுத்தவதும் வழக்கம்.

இந்நிலையில், கொரோனா வைரஸ் பெருநோய்த் தொற்றுப் பரவல் காரணமாக சென்னை மெரீனா கடற்கரையில் நடைபெறும் குடியரசுத் தின விழாவில் பள்ளி, கல்லூரி மாணவ, மாணவிகள் பங்கேற்கும் கலை நிகழ்ச்சிகள் ரத்து செய்யப்பட்டுள்ளதாக தமிழக அரசு அறிவித்துள்ளது.

மேலும், சுதந்திர போராட்ட வீரர்களின் வீடுகளுக்கே சென்று ஆட்சியர்கள் அவர்களை கவுரப்படுத்தவும், உரிய மரியாதை அளிக்கவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here