சிக்கிமில் அமைகிறது திரைப்பட நகரம்

சிக்கிம்;

கேங்க்டாக்கில் 10 ஏக்கருக்கும் அதிகமான நிலப்பரப்பில் திரைப்பட நகரத்தை அமைக்க சிக்கிம் அரசு முடிவெடுத்துள்ளது.

சிக்கிமில் அமையவுள்ள திரைப்பட நகரம் குறித்து மத்திய வட கிழக்கு மாகாண வளர்ச்சி இணை அமைச்சரும் (தனிப்பொறுப்பு), பிரதமர் அலுவலகம், பணியாளர், பொதுமக்கள் குறைகள், ஓய்வூதியம், அணு சக்தி, விண்வெளி இணை அமைச்சருமான டாக்டர் ஜிதேந்திர சிங்கிடம் மூத்த அதிகாரிகள் விளக்கினர்.

சிக்கிம் திரைப்பட ஊக்குவிப்பு வாரியம், தகவல் துறைத்தலைவர் பூஜா சர்மா ,  உள்ளுறை ஆணையர் அஷ்வனி குமார் சந்த் உள்ளிட்ட அம்மாநிலத்தின் மூத்த அதிகாரிகள் அமைச்சரிடம் திரைப்பட நகரம் குறித்து விளக்கினர்.

தலைநகரான கேங்க்டாக்கில் 10 ஏக்கருக்கும் அதிகமான நிலப்பரப்பில் திரைப்பட நகரத்தை அமைக்க சிக்கிம் அரசு முடிவெடுத்துள்ளது. நடிப்புப் பள்ளி, பல்வேறு திரைப்பட அரங்குகள், ஃபேஷன் ஷோக்களுக்கான தளங்கள், திரையரங்குகள், திறந்தவெளி அரங்கம், நாடக அரங்கம், கூட்ட அரங்குகள், பூங்கா, எடிட்டிங் அரங்குகள், ஒலி அரங்குகள் ஆகியவை இங்கு அமைக்கப்படும் .

திரைப்பட நகரம் அமைப்பதற்காக மாநில அரசை பாராட்டிய டாக்டர் ஜிதேந்திர சிங், காஷ்மீரை போன்று சிக்கிமிலும் படப்பிடிப்புகளுக்கான அழகிய இடங்கள் நிறைய இருப்பதாகக் கூறினார். முதல்வர் பிரேம் சிங் தமாங்குடன் தாம் தொடர்ந்து தொடர்பில் இருப்பதாகவும் டாக்டர் ஜிதேந்திர சிங் கூறினார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here