காட்டுப் பன்றி மோதி ஆடவர் மரணம்

ஈப்போ: தாப்பா அருகே ஈப்போ-கோலாலம்பூர் சாலையின் 59 கிலோ மீட்டரில் காட்டுப்பன்றி மோதியதில் மோட்டார் சைக்கிள் ஓட்டுநர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.

ஞாயிற்றுக்கிழமை (ஜனவரி 24) நள்ளிரவில் இந்த சம்பவம் நிகழ்ந்ததாக தாப்பா துணை  ஒ.சி.பி.டி  வான் அசாருதீன் வான் இஸ்மாயில் தெரிவித்தார். இறந்தவர் தாப்பா ஆர் அண்ட் ஆர் பகுதியில் உள்ள ஒரு துரித உணவு விடுதியில் பணிபுரிந்தார் என்றார்.

பாதிக்கப்பட்டவர் ஒரு மிருகத்தைத் தாக்கியதாக நம்பப்படுவதாகவும் அது காட்டுப்பன்றி என்று நம்பப்படுகிறது. அவரது வாகனம் சறுக்கியதால் அவர் சம்பவ இடத்திலேயே இறந்தார். அவரது உடல் பிரேத பரிசோதனைக்காக  தாப்பா மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டது என்று அவர் கூறினார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here