சினிமாமலையாளத்தில் தயாரான மோகன்லாலின் அந்த மெகா பட்ஜெட் பட ரிலீஸ் மீண்டும் தள்ளி போனதுBy Elamani - January 24, 2021 1:43 pmShareFacebookTwitterWhatsAppLinkedin பிரபல இயக்குநர் பிரியதர்ஷன் இயக்கத்தில் மோகன்லால் நடித்துள்ள மெகா பட்ஜெட் படம், ‘மரைக்காயர்: அரபிக்கடலின் சிங்கம்’. இந்தப் படம் கடந்த ஆண்டு மார்ச் மாதம் 26 ஆம் தேதி ரிலீஸ் ஆவதாக இருந்தது. ஆனால் ,கொரோனாவால் தள்ளி வைக்கப்பட்ட இந்த படம் அதே தேதியில் இந்த ஆண்டு ரிலீஸ் ஆவதாகக் கூறப்பட்டது. இருந்தும் மீண்டும் வெளியீடு தேதி தள்ளி வைக்கப்பட்டுள்ளது.16 ஆம் நூற்றாண்டில் ஆங்கிலேயர்கள், கடல் வழியாக இந்தியாவுக்கு வந்தபோது அவர்களை எதிர்த்து போராடிய குஞ்சலி மரைக்காயர் என்ற வீரரின் கதையை தொனிப்பொருளாக வைத்து இந்தப் படம் தயாராகி இருக்கிறது. இந்த படத்தில் குஞ்சலி மரைக்காயராக, மோகன்லால் நடித்து இருக்கிறார். மேலும் கீர்த்தி சுரேஷ், சுனில் ஷெட்டி, அர்ஜுன், மஞ்சு வாரியர், சித்திக் உட்பட பலர் நடிக்கிறார்கள். பிரபு, தங்காடு என்ற கேரக்டரிலும், சுஹாசினி, குஞ்சலி மரைக்காயரின் தங்கை கேரக்டரிலும், அசோக் செல்வன் வில்லன் கேரக்டரிலும் நடித்துள்ளார்கள்