மீண்டும் இணையும் பிக் பாஸ் சீசன் 4 பிரபலங்கள் – விரைவில் பிக்பாஸ் கொண்டாட்டம்!

பிக் பாஸ் நிகழ்ச்சி முடிவடைந்த நிலையில் பிக்பாஸ் கொண்டாட்டம் நடைபெற உள்ளதால் தற்போது மீண்டும் அனைத்து பிக்பாஸ் பிரபலங்களும் இணைந்துள்ளனர்.

பிரபல தனியார் தொலைக்காட்சி ஆகிய விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பப்பட்ட பிக் பாஸ் சீசன் 4 நிகழ்ச்சி கடந்த வாரம் முடிவடைந்த நிலையில், தற்போது இந்த நிகழ்ச்சிக்கான கொண்டாட்டம் நடைபெற உள்ளது. இதில் பிக் பாஸ் சீசன் 4 பிரபலங்கள் அனைவரும் கலந்து கொள்ளவுள்ளனர். இந்நிலையில் இதற்கான புகைப்படங்கள் அவ்வப்போது பதிவிடப்பட்ட கொண்டிருக்கிறது. ஆனால் இந்த நிகழ்ச்சி இன்னும் ஒளிபரப்பப்படவில்லை.

விரைவில் இந்த நிகழ்ச்சி ஒளிபரப்பப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. ஒவ்வொரு முறையுமே வைக்கப்படுவது போல பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட பிரபலங்கள் தங்களது திறமைகளை வெளிப்படுத்துவதும், தங்களது வெற்றிக்கான காரணங்களைக் கூறுவதும் போன்ற முக்கியமான நிகழ்வுகள் நடைபெறும். இந்த வருடமும் அதுபோல நடைபெற உள்ளது. ரசிகர்கள் இந்த நிகழ்ச்சிக்காக மிகுந்த ஆவலுடன் எதிர்பார்த்து காத்துக்கொண்டிருக்கின்றனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here