சூர்யா 40’ படத்தில் நடிகர் சூர்யா முதல்வராக நடிக்க உள்ளதாக தகவல் பரவி வந்த நிலையில், அதுகுறித்து அப்படத்தின் இயக்குநர் பாண்டிராஜ் விளக்கம் அளித்துள்ளார்.
இப்படத்தில் சூர்யா 5 கெட்அப்களில் நடிப்பதாகவும், அதில் ஒன்று முதலமைச்சர் வேடம் என சமூக வலைதளங்களில் தகவல் வேகமாக பரவி வந்தது.
இந்நிலையில், அதனை திட்டவட்டமாக மறுத்துள்ள அப்படத்தின் இயக்குநர் பாண்டிராஜ், வதந்திகளை நம்ப வேண்டாம் என கேட்டுக் கொண்டுள்ளார்.


நடிகர் சூர்யாவின் 40ஆவது படத்தை பாண்டிராஜ் இயக்க உள்ளார். சன் பிக்சர்ஸ் தயாரிக்கும் இப்படத்தில் சூர்யாவுக்கு ஜோடியாக பிரியங்கா மோகன் நடிக்க உள்ளார். மேலும் இப்படத்திற்கு இமான் இசையமைக்க உள்ளார். சூர்யா 40 படத்தின் ஆரம்பக்கட்ட பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.

















