கோலாலம்பூர்:
திரெங்கானு, டத்தாரான் பத்து பூரோக் பகுதியில் பிறை நிலவு மற்றும் நட்சத்திரச் சின்னங்கள் இன்றிச் சேதமடைந்த நிலையில் ஜாலோர் கெமிலாங் கொடி பறந்தது தொடர்பான விவகாரம் குறித்து மந்திரி பெசார் அகமட் சம்சூரி மோக்தார் கருத்துத் தெரிவித்துள்ளார்.
இது வேண்டுமெனச் செய்யப்பட்டது அல்லவெனவும், கடந்த வெள்ளிக்கிழமை ஏற்பட்ட பலத்த புயல் காரணமாகக் கொடியின் தையல் பிரிந்து சேதமடைந்துவிட்டதாகக் கோலா திரெங்கானு மாநகராட்சி மேயர் லிஸான் சே மாட் விளக்கம் அளித்துள்ளார்.
இச்சம்பவம் குறித்துத் தீவிர விசாரணை நடத்தப்பட்டு வருவதாகத் தெரிவித்த மந்திரி பெசார், இதுபோன்ற நிகழ்வுகள் மீண்டும் நடைபெறாது என்பதை உறுதி செய்யுமாறு கேட்டுக்கொண்டுள்ளார்.
























