வெற்றி வீராங்கனை டத்தொ நிக்கோல் டேவிட்

 

விளையாட்டு என்பது விளையாட்டானது அல்ல என்பதற்கு சான்றாக விளங்குகிறார் டத்தோ நிக்கோல் டேவிட் ஒரு சன்றாகத் திகழ்கிறார். இவர் ஒரு தீராத விளையாட்டு பிள்ளை என்றுகூடச்சொல்லலாம். 

ஸ்குவாஷ் என்றால் நிக்கோல் என்று ஓர் அர்த்தத்தையும் பதிவாக்கிக்கொள்ளலாம். மலேசிய வரலாற்றில், குறிப்பாக விளையாட்டுத்துறையில் இவர் பதித்த வெற்றி முத்திரைகள் சாதாரணமானதல்ல. அதற்கான உழைப்பு மிக அதிகம். அதற்கான சிரத்தை அபாரமானது.

இவரின் பெற்றோர் அனைத்து புழையும் அடைந்த பெருமைக்குரியவர்கள். 

உலக விளையாட்டுகளில் 40 ஆண்டுகால நிறைவைக்கொண்டாடும் இவ்வேளையில் உலக அளவிலான விளையாட்டாளர்களில் டத்தோ நிக்கோல் பெயர் முதன்மை நிலை அடைந்திருக்கிறது என்பது புகழுக்கரிய செய்தியாக மட்டும் அல்ல. மலேசியத்தின் கொடி மிக உயர்ந்து பறக்கிறது என்று பொருள்.

அனைத்துலக நாடுகளிலிருதும் பல போட்டியாளர்கள், இன்னும் விளையாட்டில் உள்ளவர்கல், விளையட்டிலிருந்து விடுபட்டவர்கள், ஓய்வுபெற்றவர்கள் என்ற அளவில் 23 விளையாட்டாளர்களும் மதிக்கின்ற உயரத்தைப் பிடித்திருக்கின்றனர். அவர்களில் நிக்கோல் முதன்மைபெற்றிருக்கிறார். 

நகமும் சதையும் என்று நட்பைக் கூறுவார்கள். அதுபோலத்தான் ஸ்குவாஷ் விளயாட்டும்,  நிக்கோல் டேவிட்டும். 

1983 இல் பிறந்த இவர் 2000த்தாம் ஆண்டில் ஷ்குவாஷ் விளையாட்டில் பெயர் பதிக்கத்தொடங்கினார். 

2018  ஆண்டுவரை சளைக்காமல் தொடர்ந்த விளையாட்டு வெறும் விளையாட்டாய்ப் போய்விடவில்லை. தங்கங்களைக் குவித்திருக்கிறது இவரின் அசுர முயற்சி. இப்பதக்கங்களில் நாட்டுப்பற்றும் இணைந்தே இருப்பதை உலகமே அறிந்திருக்கிறது.

ஆன் வழி நடந்த வாக்கெடுப்பில் இவர்பெற்ற வாக்குகள்  1,204,637 என்ற எண்ணிக்கையில் நிக்கோல் பெற்றவை 318,945 என்பதாக இருக்கின்றன  . இது ஒன்றே அவரின் விளையாட்டுக்குக் கிடைத்த ராஜமரியாதையாகும்.  

உலகத்தில் எங்கோ மூலையில் இருக்கும் மலேசியாவின் பெயரையும் டத்தோ நிக்கோல் டேவிட் பெயரையும் நினைவில் வைத்திருக்கும் பல லட்சங்களில் ஒரு பகுதியினர்தான் வாக்களித்திருக்கிறார்கள். 

2005 முதல் 2014 வரை  8 முறை சாம்பியன் ஷிப் பட்டம் பெற்றிருக்கிறார் தங்கபெண்மணி டத்தொ நிக்கோல். 81 விருகளுக்குச் சொந்தக்காரர் இவர் என்பது ஓர் இமாலய முயற்சி.

2009 ஆம் ஆண்டில் விளையாட்டிலிருந்து ஓய்வு பெற்றிருக்கிறார் என்பது விளையாட்டிலிருந்து விடுதலையல்ல.  காலமறிந்து எடுத்த சரியான முடிவு.

மக்கள் மனத்தில் இடம் பிடித்திருப்பதில்தான் உண்மையான வெற்றி என்பதை அங்கீகாரமாகக் கருதுகிறேன் என்று பெருமிதமாகக் கூறும் இவருக்கு உலக அங்கீகாரமும் இணையாகியிருக்கிறது. இவரால் பினாங்கு மாநிலத்திற்கும் பெருமை சேர்ந்திருக்கிறது.

இத்தருணத்தில் பினாங்கு மாநிலமும் இவருக்குரிய சிறப்பை வழங்க வேண்டும் என்பது ஷ்குவாஷ் ரசிகர்களின் விருப்பம்.

சாதனையாளர்களுக்கு இனம் கிடையாது, அவர்கள் மதங்களுக்கு அப்பாற்பட்டவர்கள் என்பதை உலகம் உணர்ந்திருக்கிறது. டத்தோ நிக்கோல் டேவிட் புகழ் ஷ்குவாஷ் பந்தைப்போல  திரும்பத் திருமப வந்துகொண்டே இருக்கும். 

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here