திருச்சி பாரதிதாசன் பல்கலைக்கழக துணைவேந்தராக நியமனம் செய்யப்பட்டு இருக்கும் எம்.செல்வத்துக்கு, அதற்கான ஆணையை தமிழக கவர்னர் பன்வாரிலால் புரோகித் வழங்கினார்.
சென்னை:
திருச்சி பாரதிதாசன் பல்கலைக்கழகத்தின் துணைவேந்தராக எம்.செல்வம் நியமனம் செய்யப்படுகிறார். துணைவேந்தராக நியமனம் செய்யப்பட்டதில் இருந்து 3 ஆண்டுகாலம் அவர் அந்த பொறுப்பில் இருப்பார்.
திருச்சி பாரதிதாசன் பல்கலைக்கழக துணைவேந்தராக செல்வம் நியமனம்
எம்.செல்வம் 36 ஆண்டுகாலம் சிறந்த கற்பித்தல் அனுபவம் கொண்டவர். அழகப்பா பல்கலைக்கழகத்தின் சர்வதேச வணிக , வர்த்தகத்துறை தலைவராகவும், பேராசிரியராகவும் இவர் இருந்துள்ளார்.
திருச்சி பாரதிதாசன் பல்கலைக்கழகத் துணைவேந்தராக நியமனம் செய்யப்பட்டு இருக்கும் எம்.செல்வத்துக்கு, அதற்கான ஆணையை சென்னை கிண்டி ராஜ்பவனில் பல்கலைக்கழகங்களின் வேந்தரும், தமிழக கவர்னருமான பன்வாரிலால் புரோகித் நேற்று வழங்கினார்.