மோடியுடனான புகைப்படம் மிகவும் பிடிக்கும்: சாகச நிபுணர் பியர் கிரில்ஸ் பெருமிதம்

புதுடெல்லி:

டிஸ்கவரி சேனலில் ‘மேன் வெர்சஸ் வைல்டு’ என்ற நிகழ்ச்சி மிகவும் பிரபலமானது. இதனை பிரிட்டன் சாகச நிபுணர் பியர் கிரில்ஸ் வழங்கி வருகிறார்.

அமெரிக்க முன்னாள் அதிபர் பராக் ஒபாமா, பிரதமர் நரேந்திர மோடி, சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த், பாலிவுட் நடிகர் அக் ஷய் குமார் உள்ளிட்ட பிரபலங்களுடன் இணைந்து அவர் சாகச நிகழ்ச்சியை வழங்கியுள்ளார்.

கடந்த 2019- இல் உத்தராகண்ட் மாநிலத்தின் ஜிம் கார்பெட் தேசிய வனவிலங்கு பூங்காவில் பிரதமர் நரேந்திர மோடியுடன் அவர் சாகச நிகழ்ச்சியை தொகுத்து வழங்கினார். காட்டில் மழை மற்றும் குளிருக்கு மத்தியிலும் அந்த நிகழ்ச்சி படம் பிடிக்கப்பட்டது.

இந்நிலையில் இந்த நிகழ்ச்சியில் பிரதமர் நரேந்திர மோடியுடன் காட்டில் தேநீர் அருந்தும்போது எடுக்கப்பட்ட புகைப்படத்தை ட்விட்டரில் பியர் கிரில்ஸ் பகிர்ந்து கொண்டுள்ளார்.

இது தனக்கு மிகவும் பிடித்த புகைப்படங்களில் ஒன்று என அவர் கூறியுள்ளார். இதுகுறித்து பியர் கிரில்ஸ் தனது ட்விட்டர் பதிவில், ‘பிரதமர் மோடியுடன் சாகச நிகழ்ச்சிக்கு பிறகு ஈரமாக நனைந்த உடலுடன் அவருடன் ஒரு கப் தேநீர் பகிர்ந்துகொண்டேன். இந்த தருணம், காடு எப்படி சமநிலையை பேணுகிறது என்பதை எனக்கு நினைவூட்டுகிறது’ என்று கூறியுள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here