ராமர்கோவில் கட்ட கர்நாடகத்தை சேர்ந்த கிறிஸ்துவ தொழில் அதிபர்கள், கல்வி நிறுவனங்கள் என பலர் ரூ.1 கோடி நன்கொடை கொடுத்துள்ளனர் என்று துணை முதல்-மந்திரி அஸ்வத் நாராயண் கூறியுள்ளார்.
அஸ்வத் நாராயண்
பெங்களூரு –
பெங்களூருவில் நேற்று ராமர் கோவில் கட்டுமான பணிக்கு நன்கொடை வசூல் தொடர்பான கூட்டத்தை துணை முதல்-மந்திரி அஸ்வத் நாராயண் நடத்தினார். இதில் அஸ்வத் நாராயண் பேசினார்.
ராமர்கோவில் கட்ட கர்நாடகத்தை சேர்ந்த கிறிஸ்துவ தொழில் அதிபர்கள், கல்வி நிறுவனங்கள் என பலர் ரூ.1 கோடி நன்கொடை கொடுத்துள்ளனர். பா.ஜனதா, சிறுபான்மையின மக்களுக்கு எதிரான கட்சி என்று ஒரு பிம்பத்தை ஏற்படுத்தியுள்ளனர்.
ஆனால் பா.ஜனதா அனைத்து தரப்பு மக்களின் வளர்ச்சியையும் உறுதிப்படுத்துகிறது என்றார்.