6 வயது சிறுவனுக்கு நேர்ந்த கொடூரம்

பாலக்காடு: நடுராத்திரி, வீட்டில் எல்லாரும் தூங்கி கொண்டிருந்தபோது, மகனை பாத்ரூமுக்குள் அழைத்து சென்று இளம் தாய் செய்த காரியத்தை பார்த்து ஒட்டுமொத்த கேரளாவும் உறைந்து போய் கிடக்கிறது…!

கேரளா மாநிலம் பாலக்காடு மாவட்டம் பூலக்காட்டு என்ற கிராமத்தை சேர்ந்தவர் சுலைமான்… இவரது மனைவி ஷாஹிதா.. 30 வயதாகிறது.

கடந்த ஞாயிற்றுக்கிழமை விடிகாலை 4 மணி இருக்கும், அப்போது பாலக்காடு கன்ட்ரோல் ரூமுக்கு இவர் திடீரென போன் செய்தார்.. “ஹலோ போலீஸ், நான்தான் ஷாஹிதா பேசறேன்.. 30 வயசாகுது எனக்கு.. 6 வயசில் ஒரு மகன் இருக்கான்.. அவன் பெயர் அமீல்.. அவனைதான் நான் இப்போ கொன்னுட்டேன்” என்று சொல்லி உள்ளார்.

இதை கேட்டதும் போலீசுக்கு தூக்கி வாரிப்போட்டது.. உடனடியாக அட்ரஸ் என்ன என்று கேட்கவும், ஷாஹிதாவும் பொறுமையாக தன் வீட்டு அட்ரஸ் தந்தார்.. அதனை பெற்று கொண்டு, போலீசார், கொஞ்ச நேரத்திற்கெல்லாம், ஷாஹிதா வீட்டுக்கு வந்துவிட்டனர்.. அங்கே வீட்டு வாசலில் ஷாஹிதா போலீசுக்காக காத்து கொண்டிருந்தார்.

அவரை நேரில் பார்த்ததுமே போலீசார் அதற்கு மேல் அதிர்ச்சியாகி விட்டனர்.. காரணம், ஷாஹிதாவின் மீது ரத்தமாய் வழிந்து கொண்டிருந்தது.. பிறகு சட்டென்று வீட்டிற்குள் நுழைந்தால் யாருமே இல்லை.. பிறகுதான் பாத்ரூமில் 6 வயது சிறுவன் சடலமாக ரத்த வெள்ளத்தில் மிதந்து கிடப்பதை கண்டு அலறினர்.. அவனது கழுத்தில் இருந்து மொத்த ரத்தமும் வழிந்து கொண்டிருந்தது.

அதே வீட்டில் ஒரு ரூமில் ஷாஹிதாவின் கணவரும், குழந்தைகளும் தூங்கி கொண்டிருந்தனர்.. இப்படி ஒரு சம்பவம் நடந்ததே அவர்களுக்கு தெரியவில்லை.. பிறகு ஷாஹிதாவிடம் போலீசார் விசாரணையை ஆரம்பித்தனர்.. இவர் கணவர் பெயர் சுலைமான்.. இவர்களுக்கு ஏற்கனவே 3 மகன்கள் இருக்கிறார்கள்.. இப்போது கொன்றது 4வது மகன்.. இதைதவிர, இப்போது ஷாஹிதா 3 மாத கர்ப்பமாக இருக்கிறாராம்.

ஆரம்ப காலத்தில் சுலைமான் அரபு நாட்டில் வேலை பார்த்து வந்திருக்கிறார்.. பிறகுதான் சொந்த ஊருக்கே வந்து ஆட்டோ ஓட்டி வருகிறார்.. பிள்ளையை ஏன் கழுத்து அறுத்து கொன்றீர்கள் என்று போலீசார் கேட்டதற்கு, அல்லாவுக்கு நரபலி கொடுக்க முடிவு செய்ததாகவும், அதனாலேயே தூங்கி கொண்டிருந்த மகனை பாத்ரூமுக்கு அழைத்து சென்று கத்தியால் கழுத்தை அறுத்ததாகவும் வாக்குமூலம் தந்தார்.

அல்லாவுக்காக நரபலி என்று இவர் சொன்னாலும், வேறு கோணங்களிலும் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. ஷாஹிதா, மதராசா பள்ளியில் டீச்சராக வேலை பார்த்து வருகிறாராம்.. இப்போது இவர் மீது கொலை வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது..மகனை கொன்று விட்டு போலீசில் தகவல் தெரிவிக்க வேண்டும் என்பதற்காகவே, போலீஸ் ஸ்டேஷன் நம்பரை ஏற்கனவே வாங்கி கையில் வைத்திருந்தாராம்.

இப்படித்தான், கடந்த மாதம், சித்தூர் மாவட்டம் மதனப்பள்ளியில் 2 மகள்களை, பெற்றோரே நரபலி கொடுத்த சம்பவம் நடந்தது.. அந்த பெற்றோரும் பேராசிரியர்களே.. நாளுக்கு நாள் அமானுஷ்யங்கள், நரபலிகள் பெருகி வருவதும், படித்தவர்களே இதனை அரங்கேற்றி வருவதும் நிலைகுலைய வைத்து வருகிறது.

 

 

 

 

 

 

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here