80 மில்லியன் கேட்டோமே.? பாதிதான் கொடுக்கிறீங்க!

ஐரோப்பியாவுக்கு 40 மில்லியன் டோஸ் தடுப்பூசிகள் மட்டுமே மார்ச் இறுதிக்குள் கொடுக்க முடியும் என்று பிரிட்டன் நிறுவனம் அறிவித்துள்ளது .

பிரிட்டன் நிறுவனமான அஸ்ட்ரோஜெனேகாவிடமிருந்து கடந்த சனிக்கிழமை பிரான்ஸ், இத்தாலி உள்ளிட்ட 5 ஐரோப்பிய ஒன்றிய நாடுகள் ஆஸ்ட்ரோஜெனேகா தடுப்பூசியின் முதல் தொகுப்பை பெற்றனர்.

இதில் 300 மில்லியன் டோஸ் கொரோனா தடுப்பூசிகள் வாங்க ஒப்பந்தம் செய்துள்ள நிலையில் முதல் கட்டமாக மார்ச் இறுதிக்குள் அஸ்ட்ரோஜெனேகா 80 மில்லியன் டோஸ்களை எதிர்பார்த்த நிலையில் 40 மில்லியன் டோஸ்கள் மட்டுமே வழங்குவதாக கடந்த வாரம் தெரிவித்தது .

இந்த பொறுப்பற்ற பதிலால் பிரிட்டனுக்கும் ,ஐரோப்பாவுக்கும் இடையில் பதற்றம் ஏற்பட்டது. இதனால் ஆஸ்ட்ரோஜெனேகாவின் மீது பல ஐரோப்பிய நாடுகள் கண்டனம் தெரிவித்தனர்.

இந்நிலையில் அஸ்ட்ரோஜெனேகாவின் முதல் தொகுப்பில் 5 ஐரோப்பிய ஒன்றிய நாடுகளுக்கு தடுப்பூசிகள் சனிக்கிழமை அன்று சென்றடைந்தது .நேற்று ஆஸ்ட்ரோஜெனேகா தடுப்பூசியின் முதல் தொகுப்பை ஆஸ்திரியா ,ஹங்கேரி, இத்தாலி ,பிரான்ஸ் , செக் ரிபப்ளிக் ஆகிய நாடுகளுக்கு வழங்கியது .

இதில் இத்தாலி 249,600 டோஸ்களையும் ,பிரான்ஸ் 273,600 டோஸ்களையும் அதனைத் தொடர்ந்து ஹங்கேரி 40,000 டோஸ்களையும், ஆஸ்திரியா 36,000 டோஸ்களையும்  செக் ரிபப்ளிக் 19,200 டோஸ்களையும் பெற்றன்ன என்பது குறிப்பிடத்தக்கது .

Dailyhunt

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here