அமேசான் காடுகளுக்குள் தங்கமே தங்கம்?

        அதிர்ச்சியூட்டும் விண்வெளி புகைப்படங்கள்..!

பெரு நாட்டில் இருக்கும் தங்க சுரங்கங்களை சுட்டிக்காட்டும் விண்வெளி புகைப்படங்களை நாசா வெளியிட்டுள்ளது.

பெரு ஒரு லத்தின் அமெரிக்க நாடு. இதன் தலைநகர் லிமா. மேலும் பெரு 29.7 மில்லியன் மக்கள் தொகையை கொண்ட நாடாக உள்ளது. உலக அளவில் தங்கத்தை ஏற்றுமதி செய்யக் கூடிய முக்கிய நாடுகளில் பெரு நாட்டுக்கு ஒரு முக்கிய பங்கு உண்டு. பெரு நாட்டின் தென் கிழக்குப் பகுதியில் இருக்கும் மட்ரே டி டாய்ஸ் பகுதியில் அதிக அளவில் முறையாக அனுமதி பெறாத தங்க சுரங்கங்கள் நடைபெற்று வருகிறது.

கடந்த டிசம்பர் 2020- இல் சர்வதேச விண்வெளி வீரரால் எடுக்கப்பட்ட படம் ஒன்று இணையத்தில் வைரலாகி வருகிறது. நாசா வெளியிட்டுள்ள இந்த புகைப்படத்தில் தங்க நிறத்தில் ஜொலிப்பது தங்க சுரங்கங்கள் ஆகும். அதிலும் முறையாக தங்கம் எடுக்க உரிமையில்லாதவர்கள் தோண்டி வைத்த குழிக்கள் ஆகும் என் நாசா தெரிவித்துள்ளது. அவை சூரிய ஒளிப்பட்டு எதிரொலிப்பதால் இப்படி ஜொலிக்கிறது.

பெரு நாட்டில் உள்ள அமேசான் காடுகள் பல உயிரினங்களில் வாழ்வாதாரமாக உள்ளது. குறிப்பாக இந்த பகுதி குரங்குகள், ஜாகுவார் என்றழைக்கப்படும் ஒரு வகைப் புலிகள், பட்டுப் பூச்சிகள் போன்ற உயிரினங்களுக்கு வாழ்வாதாரமாக இருந்து வருகிறது. முறையாக அனுமதி பெறாமல் தங்கம் எடுப்பதால் ஆயிரக்கணக்கான ஏக்கர் அமேசான் காடுகள் அளிக்கப்பட்டு வருகின்றன. மானிட்டரிங் ஆஃப் தி ஆண்டியன் அமேசான் ப்ராஜெக்ட்` என்கிற குழுவின் கணிப்புப் படி, கடந்த ஜனவரி 2019- இல் மேற்கொள்ளப்பட்ட ஓர் ஆராய்ச்சியில், 2018- ஆம் ஆண்டில் மட்டும் பெரு நாட்டில் 22,930 ஏக்கர் அமேசான் காடுகள் அழிக்கப்பட்டிருப்பதாகக் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

மேலும் டன் கணக்கில் பாதரசத்தை பயன்படுத்தி தங்கம் எடுக்கப்படுவதால் அங்குள்ள மக்கள் பாதிக்கப்படுகின்றனர். தங்கத்தை எடுக்கப் பயன்படுத்தும் பாதரசத்தில் கணிசமான அளவு நதியில் அல்லது சுற்றுப் புறத்தில் கலக்கவிட்டிருக்கிறார்கள் என விஞ்ஞானிகள் கூறுகின்றனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here