நமது சமுதாயப் பெண்கள் அரசியலுக்கு வரவேண்டும் – கிருஷ்ணசாமி

நமது சமுதாயப் பெண்கள் அரசியலுக்கு வரவேண்டும் என்று புதிய தமிழகம் கட்சித் தலைவர் கிருஷ்ணசாமி தெரிவித்துள்ளார்.

விருதுநகர் மாவட்டம் ராஜபாளையத்தில் புதிய தமிழகம் கட்சி சார்பில் தமிழக வளர்ச்சி அரசியல் மாவட்ட மாநாடு ஞாயிற்றுக்கிழமை இரவு நடைபெற்றது. ஜவர் மைதானத்தில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்திற்கு மாவட்ட செயலாளர் ராமராஜ், தலைமை வகித்தார்.

மாவட்ட பொருளாளர் ராமராஜ் முன்னிலை வகித்தார். பின்னர் கிருஷ்ணசாமியின் மகன் ஷியாம் கிருஷ்ணசாமி பேசியதாவது: பட்டியல் இனத்தில் வெளியேறுவது குறித்து மாற்றுக் கருத்து உடையவர்கள் சிந்திக்க வேண்டும் எனப் பேசினார். மேலும் இந்திய நாட்டின் பிரதமர் ஒரு சமுதாயத்தைப் பற்றியும், சமுதாயம் எதற்காக போராடுகிறது என்பது குறித்தும் மிகத் தெளிவாக சென்னையில் பேசியுள்ளார். நாம் நம் சமுதாயம் தன்மானத்திற்க்காக போராடுகிறோம்.

அதற்கு தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமியும், நமக்கு ஒரு அங்கீகாரம் அளிக்கும் விதமாக நாடாமன்றத்தில் மசோதா நிறைவேற்றப்பட்டுள்ளது. வரவேற்கத்தக்கது எனப் பேசினார். இதை தொடர்ந்து கிருஷ்ணசாமி பேசியதாவது: இந்த சமுதாயம் தேவேந்திர குல சமுதாய இனிமேல் அழைக்கப்படுவது பெருமைக்குரியது.

அதற்காக நம் சமுதாய மக்கள் அனைவரும் ஒற்றுமையுடன் பாடுபடவேண்டும். இனிமேல் மிகவும் கவனமாக கையாளவேண்டும். பல காலங்களில் நம்மை கலவரக்காரர்கள் எனக் கூறினார்கள். அப்போது நமக்கு வளர்ச்சி இல்லை. கலவரம் செய்ததால் தான் நாம் இந்த அளவுக்கு வளர முடிந்தது. இப்போது அதற்கு அவசியமில்லை நாம் ரோட்டில் மறியல் செய்ய வேண்டிய அவசியமில்லை, போராட வேண்டிய அவசியம் இல்லை‌. நம்முடைய கோரிக்கைகள் ஏற்கப்பட்டுள்ளது.

அதனடிப்படையில் தேவேந்திர குல வேளாளர்களின் அறிவிக்கப்படுவதற்கு மசோதா நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டுள்ளது‌. இது கடந்த 15 ஆண்டுகளாக போராடியதற்காக கிடைத்த வெற்றி. இந்த வெற்றிக்கு துணை நின்ற முதல்வர் எடப்பாடி பழனிச்சாமிக்கும், பாரத பிரதமர் மோடிக்கும் நன்றி தெரிவித்தார்.

மேலும் இந்த சமுதாயம் பல நூற்றாண்டுகள் முன்பு மன்னர் ஆட்சி காலத்தில் ஆண்ட சமுதாயம். ஆனால் மன்னர் காலத்தில் நிலங்கள் அபகரிக்கப்பட்டு நிலங்களில் பண்ணைத் தொழிலாளர்கள் வேலை பார்க்க வேண்டிய அவல நிலை ஏற்பட்டுள்ளது. அதற்கு பின்பு ஆங்கிலேயரும் இந்த இனத்திற்காக எந்த முயற்சியும் எடுக்காமல் இந்த இனத்தின் வரலாறு அறியாமல் பட்டியல் இனத்தில் சேர்த்துவிட்டனர்.

தற்போது நாம் பட்டியில் பிரிவில் இருந்து வெளிவர அனைத்து பணிகளும் செய்து போராடி வெற்றியை நோக்கி செல்கிறோம். திமுக ஆட்சி காலத்தில் பள்ளன், பறையன் என்று அழைப்பதை பள்ளர், பறையர் என்று அழைக்க வேண்டும் என கோரிக்கை வைத்தபோது செவிசாய்க்கவில்லை. திமுக அதற்கு பதிலாக அப்போதைய முதல்வராக இருந்த கலைஞர் ஆதிதிராவிடர் என அழைத்ததால் எந்த ஒரு பலனும் கிடைக்கவில்லை.

நாம் தேவேந்திரகுல வேளாளர் என அழைக்கப்பட வேண்டும். பட்டியலில் இருந்து வெளிவரவேண்டும். நமக்கு இட ஒதுக்கீடு மற்ற சமுதாயத்தில் கிடைப்பதுபோல் 8 சதவீதமும் அல்லது 9 சதவீதம் முதல் 10 சதவீதம் கிடைத்தால் போதும்‌.

இந்த சமுதாயத்தின் வரலாறு எங்கு ஆய்வு செய்தாலும் கீழடி அல்லது எங்கு ஆய்வு செய்தாலும் அந்த ஆய்வில் நாம் தான் முதலில் இருப்போம். நாம் அனைவரும் ஒற்றுமையுடன் செயல்பட வேண்டும். இனத்திற்காக ஜாதியைச் சொல்லி மதமாற்றம் கூடாது‌. மதம் மாறுவதை தவிர்க்க வேண்டும். இந்துக்கள் என்று ஒற்றுமையுடன் இருக்க வேண்டும். நாம் ஆதிகாலத்தில் இந்துக்களை வழிபட்டு தான் வந்தோம். அதையே தொடர்ந்து இந்துவாக இருக்க வேண்டும்.

நமது சமுதாய பெண்கள் அரசியலுக்கு வரவேண்டும். உதாரணத்திற்கு சிறையில் நான்கு ஆண்டு காலம் இருந்து வெளியே வந்த பெண்மணி (சசிகலா )தனக்கு உடல் நலகுறைவாக உள்ளது என ஓய்வெடுக்க வேண்டும் என்ற எண்ணம் இல்லாமல் தொடர்ந்து கட்சியை கைப்பற்ற வேண்டும்‌. ஆட்சியைக் கைப்பற்ற வேண்டும். என்ற எண்ணத்தோடு செயல்பட்டு வருகிறார்.

அதேபோல் நமது இன மக்களும் அரசியல் களத்திலும் செயல்பட வேண்டும் எனவும் இந்த மாநாட்டில் கலந்து கொண்ட அனைவரும் இனிமேல் பச்சை சிவப்பு புதிய தமிழகம் கட்சி கொடியை மட்டுமே கையில் பிடிக்க வேண்டும். நமது சமுதாயத்தினர் இனிமேல் மாற்று சமுதாயத்தினரிடம் இணக்கமாக நடந்துகொள்ள வேண்டும்‌. யாரிடமும் சண்டை போடுவதோ பிரச்னை செய்வதோ இருக்கக்கூடாது. நீங்கள் அமைதியாக இருந்து மற்றவர்களும் சண்டையிடாமல் இருக்க வேண்டும்‌ எனக் கூறினார் இந்த மாநாட்டில் கலந்து கொண்ட தொண்டர்கள் அனைவரும் கிராமந்தோறும் சென்று நமது சமுதாயத்திற்காகவும் கட்சிக்காகவும் பிரச்சாரத்தில் ஈடுபட வேண்டும்.

முடிவில் நாம் தேவேந்திரகுல வேளாளர் என்று இன்று முதல் அழைக்கப்படும் வகையில் அனைவரும் கவனத்துடன் செயல்பட வேண்டும். இந்த வெற்றிக்கு உறுதுணையாக இருந்த பிரதமர் மோடி அமித்ஷா, முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி ஆகியோருக்கு நன்றி தெரிவிக்கும் விதமாக அனைவரும் எழுந்து நின்று கைதட்டி நன்றியை தெரிவிக்க வேண்டும் எனக் கூறினார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here