மாறுவது நாமாக இருந்தால் மாற்றங்கள் தானாக நடக்கும்!

 

             – மாற்றங்கள் ஒன்றே மாறாதது!

கோவிட் -19

அகராதியில் இடம்பெற்ற பெயாராகிவிட்டது. இவ்வார்த்தையை உச்சரிக்காதவர்கள் இருக்கவே முடியாது. கடந்த  ஒராண்டுக்கும் மேல் பிறக்கும் குழந்தைகளும் அம்மா என்று பேசத்தொடங்கும் முன் பசிக்காக கேவிக் கேவி அழும்போதெல்லாம் கோவிட் என்பதாகத்தான் காதில் விழுகிறது. மூளைக்குள் அப்படியே ஒலியாகப் பதிந்துவிட்டதன் காரணமோ!

அதனால், குழந்தைகளின் பாதுகாப்பு என்பது மிக முக்கியம் என்பதாகிவிட்டது. இதற்காகவே குழந்தைகளுக்கும் முகக்கவசம் அணிவிக்க வேண்டிய கட்டாயம் உருவாகிவிட்டது.

இன்றைய குழந்தைகளுக்கு நாட்டின் நிலவரம் நன்கு புரிகிறது என்பதை ஒப்புக்கொள்ளத்தான் வேண்டும். குறிப்பாக முகக்கவசம் அணிவதில் புறக்கணிப்பைக் காட்டுவதில்லை என்பது மிகத்தெளிவான உணமையகி வருகிறது.

கோவிட்-19 என்பது உயிர்க்கொல்லி என்பதை குழந்தைகள் நன்கு புரிந்து வைத்திருக்கின்றனர் .

காரில் செல்வதாக இருந்தாலும், மோட்டார் சைக்கிளில் செல்வதாக இருந்தாலும் முதலில் முகக்கவசம் தேடும் குழந்தைகளே மிக அதிகாமாகிவிட்டார்கள். ஆதலால், முகக்கவசம் அணியும்போது அந்த முகக்கவசங்கள் பாதுகாப்பானதா எனபதில்தான் இனி  அதிகக்கவனம் செலுத்த வேண்டும்.

ஒப்புக்கு முக்கவசம் என்பதெல்லாம் இனி காரியத்திற்கு உதவாது. தரமானது, அதோடு பாதுகாப்பானது என்பதில் எப்போதும் கவனத்தை இறுத்திக்கொள்ளவேண்டும்.

கோவிட் தொற்றுகள் இப்போதெல்லாம் வேவ்வேறு பரிணாமங்களில் உருவெடுத்து வருகின்றன என்று செய்திகள் கூறுகின்றன. செய்திகள் உண்மையா? பொய்யா என்பது ஆய்வாக இல்லாமல், பாதுகாப்பு தொடர்ச்சியானதாக இருக்க வேன்டும் என்பதுதான் மிக அவசியம் என்றும் ஒருதரப்பு கூறுகிறது. இது உண்மைதான்.

இத்தொற்று மனிதனை விட்டு அகலப்போவதில்லை. குறையலாம் அல்லது கூடலாம்  அவ்வளவுதான். முற்றிலும் மறைந்து ஒழிந்து போய்விடும் என்பதற்கு எந்த அறிகுறியும் இல்லை. இதுவரை அதறகான பதிலை உலக சுகாதார அமைப்பும் கூற இயலாமல் கதிகலங்கிக் கிடக்கிறது. அமெரிக்காவும் ஆடிப்போய்கிடக்கிறது. பிரேசில் நாடும் விழி பிதுங்கி அச்சத்தில் உறைந்துகிடக்கிறது.

அமெரிக்க அதிபரும் 100 நாள் முகக்கவசம் அணியும் அவசியத்தை வலியுறுத்தி இருக்கிறார்.

எது எப்படியோ! யாரோ வந்து நம்மைக் காப்பாற்றுவர்கள் என்று இருப்பதைவிட நம்மை நாமே காப்பாற்றிக்கொள்வதே மிகச்சிறந்த  வழியாகும்  என்பதை நன்கு உணர்ந்து கொள்வதே முதலுதவியாகவும் காலத்தின் கட்டாயமாகவும் இருக்கும்.

பாதுகாப்பு என்பது எதிர் வீட்டில் இருப்பதாக நினைப்பதை விட்டு, அது நம்வீட்டிலிருந்தே தொடங்குவதாகப் புரிதல் வேண்டும். அந்தப்புரிதல் அனைவரிடமும் ஏற்ப்பட்டிருக்கிறது என்றாலும் இன்னும் கூடுதலாக வேண்டும் என்பதில் அலட்சியமே கூடாது. அரசாங்கமும் இதைத்தான் வலியுறுத்துகிறது.

நாட்டில் கோவிட் -19 எண்ணிக்கை கூடுவதும் குறைவதும் தொலைக்காட்சி சீரியல்கள் போலவே கண்ணிரை வரவழைக்கின்றன. அதனால், பாதுகாப்புப் புரிதலில் கசிவு ஏற்பட்டுவிடக்கூடாது, அலட்சியம் என்பது அறவே கூடாது.

பிள்ளைகளின் கல்விதான் இன்றைய தலையாய கவலையாக பல பெற்றோர்களை ஆட்டுவிக்கிறது . ஆன் லைன் கல்விதான் மருந்து என்றும் ஆகிவிட்டது. இந்த மருந்தை ஆரோக்கிய டானிக் காக மாற்றிக்கொள்ளவேண்டிய காலம் கவலைக்குள்ளாக்கியிருக்கிறது.

எதிர்காலத்தில்  ஆன் லைன் கல்வியும் பாடங்களின் ஒருபகுதியாக மாறிவிடும். இதை விரும்பினாலும் விரும்பாவிட்டாலும் அதுதான் நடக்கப்போகிறது. தொடர்ந்து தேர்வுகளும் ஆன்லைன் வழி நடக்கலாம். கலவித்துறையில் ஆனலைன் கல்வி முறை  பாட வகையாகவே கையாளப்பட்டாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை.

அப்போது பள்ளிக்கூட  பாட  நேரங்கள் குறைந்து ஆன் கல்வி நேரம் அதிகரிக்கப்படலாம் இவற்றையெல்லாம் எதிர்ப்பதைவிட்டு இணைந்து வாழப் பழகிக்கொண்டால்  கோவிட் -19 க்கும் கோவில் கட்டலாம்.

மாற்றங்கள் ஒன்றுதான் மாறாதது. மாறுவது நாமாக இருந்தால் மாற்றங்கள் தானாக நடக்கும்.

 

கா. இளமணி

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here