ஐந்தே நிமிடங்களில் பிடிபட்ட 100 கிலோ மலைப் பாம்பு

கோலாலம்பூர்:

வீடு ஒன்றின் முன்புறத்தில் அழையா விருந்தாளியாக வந்த மலைப் பாம்பு ஒன்று, சாலையில் வளைந்து நெளிந்து அளப்பறை செய்துக் கொண்டிருந்தது.

பெசுட், கம்போங் ராஜா என்ற இடத்தில் பிடிபட்ட அந்தப் பாம்பு 100 கிலோ எடை, 10 மீட்டர் நீளத்தைக் கொண்டதாகும்.

இன்று காலையில், சாலையின் குறுக்கே கிடந்த அந்தப் பாம்பைக் கண்டு அதிர்ந்துப் போன அந்த வீட்டின் குடியிருப்பாளர் அதுபற்றி உடனடியாக தீயணைப்பு மீட்பு இலாகாவுக்கு தகவல் தெரிவித்தார்.

சம்பவ இடத்திலிருந்து சுமார் 50 மீட்டர் தொலைவில்தான் பெசுட் தீயணைப்பு, மீட்பு நிலையம் உள்ளது. அடுத்த சில நிமிடப் பொழுதில், காலை 7.22 மணியளவில் அங்கு வந்து சேர்ந்த தீயணைப்பு, மீட்பு நிலையத்தை சேர்ந்த நான்கு வீரர்கள் ஐந்தே நிமிடங்களில் அந்த மலைப்பாம்பை மிக லாவகமாக பிடித்தனர்.

அருகிலுள்ள காட்டுப் பகுதியில் இருந்து அந்த மலைப் பாம்பு அங்கு வந்திருக்கலாம் என்று நம்பப்படுகிறது. பின்னர் அந்தப் பாம்பு வனவிலங்கு, பூங்கா இலாகாவிடம் ஒப்படைக்கப்பட்டது என்று பெசூட் தீயணைப்பு, மீட்பு நிலையத் தலைவர் முகமட் அஸ்ருல் இஸாம் தெரிவித்தார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here