கர்ப்பத்திற்கு காற்று தான் காரணமாம்! -புதிய கப்சா…

    – கர்ப்பமான 15 நிமிடதில் பிறந்த குழந்தை!

உடலுறவு கொள்ளாமல் குழந்தை பிறப்பது சாத்தியமா? என்ற கேள்விக்கான பதில் இந்தோனேசியாவில் நிகழ்ந்துள்ளது..!

இந்த பறந்து விரிந்த உலகில் ஒவ்வொரு நிமிடமும் ஏதாவது ஒரு மூலையில் விசித்திரமான செயல் நடந்து கொண்டு தான் இருக்கிறது. அது, நகைச்சுவையாகவும் இருக்கலாம்; அல்லது அதிர்ச்சி தரக்கூடிய நிகழ்வுகளாவும் இருக்கலாம்.

அந்த நிகழ்வுகள் அனைத்து இணையதளம் (Social Media) மூலம் நம்மிடம் வந்து சேர்கிறது. அந்தவகையில், காற்றின் மூலம் கர்ப்பம் தரித்து, அடுத்த 15 ஆவது நிமிடத்தில் குழந்தையும் பெற்றுள்ளார் இந்தோனேசியாவை சேர்ந்த ஒரு பெண்.

இந்தோனேசியாவின் மேற்கு ஜாவா பகுதியின் சியாஜூர் (bizarre claim) பகுதியை சேர்ந்த 25 வயதுடையவர் சிதி சைனா (Siti Zainah). இவர் எப்பவும் போல சம்பவத்தன்று, பிரார்த்தனையை முடித்துவிட்டு, வீட்டில் வந்து உட்கார்ந்துள்ளார்.

தரையில் முகத்தை கீழே சாய்த்தவாறு படுத்திருந்திருக்கிறார். அப்போது, திடீர் என ஒரு காற்று (wind) அவரின் பிறப்புறுப்பு (vagina) வழியாக சென்று அவரின் வயிற்றை நிரப்பியுள்ளது. சற்று நேரத்தில் அவரது வயிறு பெரியதாக ஆரம்பித்துள்ளது.

இதையடுத்து, அடுத்த 15 ஆவது நிமிடத்தில் அவருக்கு ஒரு ஆரோக்கியமான பெண் குழந்தையும் பிறந்துள்ளது. அந்த குழந்தை 2.9 கிலோகிராம் எடை கொண்டது. இந்த கர்ப்பத்துக்கு (pregnancy) காரணம் காற்று என்றும், உடலுறவு இல்லவே இல்லை என்றும் அடித்து சொல்கிறார் அந்த பெண். இந்த விஷயம் அந்த கிராமம் முழுவதும் பரவியதை அடுத்து காவல்துறைக்கு, விஷயம் போனது. சம்பந்தப்பட்ட பெண்ணை போலீசார் விசாரித்தனர்.

இவருக்கு ஏற்கனவே திருமணமாகி 3 குழந்தைகள் இருக்கும் நிலையில், கடந்த 4 மாதங்களுக்கு முன் இவருக்கு விவாகரத்து ஆகியுள்ளது. இந்நிலையில், இந்த சம்பவம் பெரும் குழப்பத்தை ஏற்படுத்தியுள்ளது. வேறு யார் மூலமாவது அந்த பெண் கர்ப்பமாகி இருக்கலாம் என்று சந்தேகிக்கப்படுகிறது.

உண்மை என்ன என்றால், இதை அறிவியலில் “cryptic pregnancy” என்று கூறுவார்கள். இந்த கருத்தரித்தலில் HCG என்ற ஹார்மோன் இல்லாததால், இயல்பாக இதை கருத்தரிப்பு கருவியால் கூட இதை கணிக்க முடியாது என ஆய்வாளர்கள் கூறுகின்றனர்.

ஏன், அல்ட்ரா சவுண்ட் மூலம் கூட இந்த கர்ப்பத்தை கணிக்க இயலாது என மருத்துவர்கள் கூறுகின்றனர். இவர் 4 மாதங்களுக்கு முன் தனது கணவருடன் கண்டிப்பாக உடலுறவு கொண்டிருப்பார். அதன் மூலம் உருவானதுதான் இந்த குழந்தை.

இப்படி கர்ப்பமான பெண்களுக்கு குழந்தை பிறக்க இருக்கும் சில மணி நேரங்களுக்கு முன்பு தான் கர்ப்பமாக இருப்பது அவர்களுக்கு தெரியவரும் என ஆய்வாளர்கள் கூறுகின்றனர். இது போன்ற சம்பவங்கள் வெளிநாடுகளில் நடப்பது இயல்புதான். இதற்கு கள்ளத் தொடர்பு என்ற அர்த்தம் இல்லை. இவர்களுக்கு, குழந்தை பிறக்க 10 முதல் 14 மாதங்கள் வரை ஆகலாம் எனவும் ஆய்வுகள் தெரிவிக்கின்றன.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here