வேலையில்லாப் பட்டதாரிகளுக்கு தற்காலிக வேலை வாய்ப்பு

தொழில் முனைவர் கூட்டுறவு மேம்பாட்டுத் துறை அமைச்சு இந்த ஆண்டு 5,000  வேலையில்லாப் பட்டதாரிகளுக்கு வேலை வாய்ப்பு அமைத்து கொடுக்க புரோதெஜ் (protege) என்ற ஒரு திட்டத்தை அறிமுகம் செய்துள்ளது. இந்தத் திட்டத்தில் பங்கேற்பவர்கள் புரோதெஜ் ரெடி டு வேர்க் என்ற வேலை வாய்ப்பு திட்டத்தின் கீழ் அமர்த்தப்படுவர்.  இத்திட்டத்தில் அரசாங்க இலாகாக்கள், அரசாங்க நிறுவனங்கள், அரசு சார்ந்த நிறுவனங்கள் (ஜிஎல்சி) ஆகியவற்றில் அவர்கள் ஒரு குறுகிய கால வேலை வாய்ப்புகளைப் பெறுவர்.

இந்த வேலை வாய்ப்பு திட்டம் கோவிட் -19 காலகட்டத்தில் புதிய பட்டதாரிகள் வேலையின்மை பிரச்சினைகளை எதிர்க்கொள்ளும் நிலையில் அவற்றுக்குத் தீர்வுக்காண்பதற்கு இத்திட்டம்  கைகொடுக்கிறது என்று தொழில் முனைவர் கூட்டுறவு மேம்பாட்டு அமைச்சர் டத்தோ ஸ்ரீ டாக்டர் ஹாஜி வான் ஜுனாய்டி துவாங்கு ஜஃபார் தெரிவித்தார்.

தற்போது கோவிட்-19 தொற்று விளைவின் எதிரொலியாக ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடியால் நாடு முழுவதிலும் 232,000 பேர் வேலையில்லாப் பட்டதாரிகளாக உள்ளனர். குறிப்பாக புதிய பட்டதாரிகள் தான் இந்த வேலையில்லாத் திண்டாட்டத்தில் அதிகம் சிக்கித் தவிக்கின்றனர்.

இவ்வேலை வாய்ப்பு திட்டத்தின் இறுதியில், இந்தப் பட்டதாரிகள் புதிய  திறன்களையும் அனுபவங்களையும் கற்றுக்கொண்டவர்களாக இருப்பர் என்றும் அவர் கூறினார். இத்திட்டம் வேலையில்லாப் பட்டதாரிகளுக்கு வேலை வாய்ப்புகளை ஏற்படுத்தி தருவது மட்டுமன்றி அவர்களது பணிகளில் பல திறன்களைக் கொண்டு எவ்வாறு அணுகலாம் என்பதையும் அறிந்து கொள்ளலாம் என்று அவர் சொன்னார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here