ரஷ்யாவில் மனிதர்களுக்குப் பறவை காய்ச்சல்!

மாஸ்கோ:
ரஷ்யாவின் தெற்குப்பகுதியிலுள்ள கோழிப்பண்ணைகளில் கடந்த டிசம்பர் மாதத்தில் பறவைக்காய்ச்சல் வேகமாகப் பரவியது. இந்நிலையில், பண்ணைகளில் வேலை பார்த்த 7 பேருக்கு பறவைக்காய்ச்சல் தொற்றியிருப்பது தற்போது கண்டறியப்பட்டுள்ளது.
ரஷ்யாவில் மனிதர்களுக்கு பறவை காய்ச்சல் பரவியிருப்பது இதுவே முதல்முறை. எச்5என்8 எனப்படும் இவ்வகை காய்ச்சல் மனிதர்களிடமிருந்து மற்றவர்களுக்கு பரவவில்லை. ஆனாலும், எச்சரிக்கையோடு இருக்க வேண்டுமென சுகாதார ஆய்வாளர்கள் எச்சரித்துள்ளனர். உலக சுகாதார நிறுவனத்துக்கு தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here