பி40 பிரிவினருக்கு பி2 லைசென்ஸ்

 

பி40 பிரிவு இளைஞர்களுக்கு கட்டணக் கழிவில் பி2 (ஆ2) மோட்டார் சைகை்கிள் லைசென்ஸ் வழங்கப்படுகிறது. வறிய மற்றும் பி40 பிரிவைச் சேர்ந்த 1 கோடியே 30 லட்சம் இளைஞர்கள் இந்த லைசென்ஸைப் பெறுவதற்குத் தகுதி பெற்றிருக்கின்றனர்.

பரிவு லைசென்ஸ் (Lesen Prihatin) திட்டத்தின் கீழ் இந்த உதவி முன்னெடுக்கப்பட்டிருக்கிறது. இப்பிரிவு மக்களின் வாழ்வாதார சுமைகளைக் குறைக்கும் நோக்கத்தில் பெரிக்காத்தான் நேஷனல் அரசாங்கம் இப்பரிவுத் திட்டத்தை அறிவித்து அமல்படுத்தத் தொடங்கி இருக்கிறது.

இதற்கான செலவுகளைச் சமாளிக்கும் வகையில் இந்த பி2 லைசென்சுக்கான கட்டணத்தை அரசாங்கம் 350 ரிங்கிட் என நிர்ணயித்துள்ளது. இளைஞர்கள் இந்தக் கோவிட்-19 காலகட்டத்தில் வருமானத்திற்கும் வாழ்வாதாரத்திற்கும் போராடிக் கொண்டிருக்கும் நிலையில் அவர்களின் நிலையை அரசாங்கம் மிகக் கருணையோடு அணுகியுள்ளது.

இதற்கான விரிவான ஆய்வை மேற்கொண்ட அரசாங்கம் அதற்குரிய வழிகாட்டியையும் தயாரித்துள்ளது. இந்த ஆய்வில் மோட்டார் சைகை்கிள் பெறுவதற்குத் தகுதிபெற்றிருக்கும் இளைஞர்களின் எண்ணிக்கையையும் அரசாங்கம் தன்னுடைய தரவு பதிவேட்டில் இடம்பெறச் ஙெ்ய்திருக்கிறது.

இளைஞர்கள் இந்த அரிய வாய்ப்பைப் பயன்படுத்திக் கொண்டு பி2 லைசென்ஸ் பெறுவதற்கு முயற்சிசெய்ய வேண்டும். எதுவும் தானாகத் தேடி வராது. நாம்தான் அதனைத் தேடிச் செல்ல வேண்டும்.

அதேநேரத்தில் இதுதான் சமயம் என்று எண்ணி வாகனமோட்டும் பயிற்சி நிறுவனங்கள் நிர்ணயிக்கப்பட்ட கட்டணத்தைவிட கூடுதல் கட்டணம் விதிப்பது கூடாது.
கடந்த ஜனவரி மாதமே இந்த லைசென்ஸ் பரிவுத்திட்ட அமலாக்கத்திற்குத் தாம் ஒப்புதல் அளித்துவிட்டதாக போக்குவரத்து அமைச்சர் டத்தோஸ்ரீ வீ கா சியோங் அறிவித்திருக்கிறார்.

புறநகர்ப் பகுதிகளில் மோட்டார் சைகை்கிள்களின் தேவை மிகவும் அதிகமாக இருக்கிறது. போக்குவரத்துக்கு மோட்டார் சைகை்கிள்களே பிரதானமாக இருக்கின்றன என்பதைத் தெளிவாக அறிந்த பின்னரே அரசாங்கம் இப்பரிவுத் திட்டத்தை அறிமுகப்படுத்தியிருக்கிறது.

புறநகர்ப் பகுதிகளில் வாழும் பெற்றோரிடம் நடத்தப்பட்ட ஆய்வுகளில் இந்த உண்மை வெளிப்பட்டது. தேசிய முன்னணி அரசாங்கம் ஆட்சி பீடத்தில் இருந்தபோது 2016இல் இத்திட்டம் அமல்படுத்தப்பட்டதையும் நினைவுகூரத்தான் வேண்டும்.

தற்போது அமல்படுத்தப்பட்டிருக்கும் இந்தப் பரிவுத் திட்டத்தில் பி2 மோட்டார் சைகை்கிள் லைசென்சுக்கான உச்சவரம்புக் கட்டணம் 350 ரிங்கிட் என நிர்ணயிக்கப்பட்டிருக்கிறது.

இக்கட்டணம் தொடர்பான ஆய்வுகள், வழிகாட்டிகள் தற்போது பரிசீலனையில் உள்ளன. விரைவில் அவை அறிவிக்கப்படும் என்று போக்குவரத்து அமைச்சீ அறிவித்திருக்கிறது.

அதேசமயத்தில் புதிதாக லைசென்ஸ் பெறும் இளைஞர்கள் சாலைகளில் தங்களின் உயிர் மட்டுமன்றி சாலையைப் பயன்படுத்தும் பொதுமக்களின் உயிர்களையும் மனத்தில் பதித்து மோட்டார்  சைகை்கிளை இயக்க வேண்டும்.

அதிக வேகம் ஆபத்து. விபத்து நேர்ந்தால் உயிர் பறிபோகும் என்ற சிந்தனை எப்போதும் நினைவில் இருக்க வேண்டும். போக்குவரத்து வசதிக்காக ஒரு பரிவுத் திட்டத்தின் கீழ் அரசாங்கம் அமல்படுத்தியிருக்கும் இந்த வாய்ப்பு, இளைஞர்களின் அலட்சியத்தில் பின்னாளில் கேள்விக்குறியாக மாறிவிடக்கூடாது.

இன்றைய சுழலில் பல இளைஞர்கள் லைசென்ஸ் இன்றி மோட்டார் சைகை்கிள் ஓட்டுவதற்குத் துணிகின்றனர். லைசென்ஸ் எடுப்பதற்குப் பணம் இல்லாதது ஒரு காரணமாக இருக்கலாம்.

இவற்றையெல்லாம் நன்கு ஆராய்ந்துதான் பெரிக்காத்தான் நேஷனல் அரசாங்கம் இந்த லைசென்ஸ் பரிவுத் திட்டத்தை அமல்படுத்தியிருக்கிறது.

இளைஞர்கள் இந்த வாய்ப்பை விவேகமாகப் பயன்படுத்தி பயன்பெற வேண்டும். ஆக்கப்பூர்வமான வாழ்வாதாரத்திற்கு அதனை முழுமையாகப் பயன்படுத்திக்கொள்ள வேண்டும்.

– பி.ஆர். ராஜன்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here